ஈழத் தமிழர்

Saturday, June 30, 2007

இலங்கையைத் தகர்த்தெறியும் சிங்களவர்

ஒன்றுபட்ட இலங்கையைத் தகர்த்தெறியும் சிங்களவர்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
அமைச்சர் திசா விதாரணரை உடயடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே. வி. பி.) பொதுச் செயலாளர் விமல் வீரவன்ச கோரியுள்ளார். அவ்வாறு அவரை நீக்காவிட்டல் சிங்களவரிடையே சட்டம் ஒழுங்குப் பிரச்சனை வலுத்துவிடும் எனவும் விமல் வீரவன்ச அச்சுறுத்தியுள்ளார்.
தமிழருக்கு அதிகாரப் பரவலாக்கம் போதுமான அளவு கொடுக்கவேண்டும் எனத் திசா விதாரணர் கூறியமையே இந்த அச்சுறுத்தலுக்குக் காரணம். ஒற்றையாட்சிக்கு வெளியே எந்தத் தீர்வையும் காணக்கூடாது என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நிலை. இந்த நிலையையே தேர்தல் அறிக்கையாக இராஜபக்சாவும் சிங்கள மக்களிடையே மகிந்த சிந்தனையாக முன்வைத்துக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். சில வாரங்களில் தீர்வுப் பொதியை முன்வைக்கவேண்டிய கட்டாயம் இராஜபக்சாவுக்கு உண்டு. மேலை நாடுகளும் அமெரிக்காவும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இராஜபக்சாவை எச்சரித்து வருகின்றன. படை வலிமைப் பெருக்கத்தால் அல்லது போரில் வெற்றியால் இலங்கையில் இனச் சிக்கலுக்குத் தீர்வு இல்லை என்பதையே இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இராஜபக்சாவுக்கு எடுத்துரைத்து வருகின்றன.
சிங்களவரிடையே, விக்கிரமபாகு கருணரத்தினா, குமார் ரூபசிங்க போன்ற பலர், போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஏதாவது ஒரு அரசியல் தீர்வுக்கு வருமாறு இராஜபக்சாவுக்கு எடுத்துக் கூறுகின்றனர். போருக்கு எதிராகச் சிங்கள மக்களிடையே பிரசாரம் செய்து வருகின்றனர்.
போருக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பவர்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என இராஜபக்சா அரசு குற்றம் சாற்றிவருகிறது. போருக்கு எதிரான கருத்துகளைச் சிங்கள நாளேடுகளில் எழுதிய சிங்களவரான இதழாளர் மூவரைக் கடத்திச் சென்றுள்ளனர் அரச ஆதரவாளர். சில வாரங்களாகவே அவர்களின் இருப்பிடத்தை எவராலும் அறிய முடியவில்லை.
இனச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அமைதித் தீர்வுப் பொதி ஒன்றைக் கூட்டாகத் தயாரிப்பதற்காக, அரசுடன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு வந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சி, அந்த உடன்பாட்டிலிருந்து பின்வாங்கி உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படிப்படியாகப் பிரித்தெடுத்து ஆளும் கட்சியில் சேர்த்துவரும் இராஜபக்சாவின் நடவடிக்கையை எதிர்த்தே ரணில் இவ்வாறு பின்வாங்கினார்.
இவ்வாறு பிரித்தெடுத்ததால், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பலம் பெருகி உள்ளது. தனிப்பெரும்பான்மையை ஆளும் தரப்பினர் பெற்றுள்ளனர். ஆனாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இன்றி, அரசியலமைப்பைத் திருத்த முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்ததால், தேர்தலில் தம்மை ஆதரித்து வெற்றி பெறச் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் கிடுக்கிப் பிடியிலிருந்து விடுபடலாம் என இராஜபக்சா நினைக்கிறார். மேலைநாடுகளும் அமெரிக்காவும் இதில் இராஜபக்சாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. தனிப்பெரும்பான்மையைப் பயன்படுத்தி, விரைவில் அரசியல் தீர்வுப் பொதியை முன்வைக்குமாறு இராஜபக்சாவை மேலைநாடுகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.
சொற்களை வைத்துச் சிக்கலை நீடிக்கவேண்டாம். ஒற்றையாட்சி, கூட்டாட்சி என்ற சொற்களே தேவையில்லை. அரசியல் தீர்வே தேவை. இவ்வாறு இந்தியாவிடமும் மேலை நாடுகளிடமும் இராஜபக்சா கூறிவருகிறார். இலங்கை மக்கள் அனைவரும் ஏற்கக் கூடிய தீர்வாக, இலங்கையில் தயாரிக்கும் தீர்வு ஒன்றுக்கு முயல்வோம் என்ற அவரது நிலைக்குப் போதுமான ஆதரவு எங்கும் எந்தச் சிங்களக் கட்சியிடமிருந்தும் வராததால், இராஜபக்சா போரைத் தொடர்கிறார்.
தெற்கத்தைய கருத்தொற்றுமைத் தேடலில், சிங்களவரிடையே கருத்தொற்றுமையை உருவாக்க முடியாததால் கடந்த 60 ஆண்டுகளாகப் புரையோடிய புண்ணாகச் சிங்கள-தமிழ் இனச் சிக்கல் தொடர் கதையாகி நீள்கிறது.
1957இன் பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்பாடு முறிய ஜெயவர்த்தனா காரணர். 1965இன் டட்லி - செல்வநாயகம் உடன்பாடு முறிய சிறீமாவோ காரணர். 1987இன் இந்திய - இலங்கை உடன்பாட்டைப் பிரேமதாசா எதிர்த்தார், இராஜபக்சே முறித்தார். 2002இன் ரணில் - பிரபாகரன் உடன்பாடு செயற்படாதிருக்குமாறு சந்திரிகாவும் மகிந்தா இராஜபக்சாவும் பார்த்துக் கொள்கின்றனர். ஒற்றையாட்சிக்கு வெளியே தீர்வு அமையாதவாறு மக்கள் விடுதலை முன்னணியினர் காவல் காக்கின்றனர். அதிகாரப் பரவலாக்கம் தேவை என்று குரலெழுப்பிய அமைச்சர் திசா விதாரணரைப் பதவி விலகக் கோருகின்றனர். எனவே தெற்கத்தைய ஒற்றுமை கானல் நீரே!
பிப்ருவரி 22, 2007 சிங்களவருக்கு எட்டிக் காயாய்க் கசக்கிறது. ரணில் - பிரபாகரன் உடன்பாடு எட்டி 5 ஆண்டுகள் ஆகும் நாள் அன்றுதான். ஒரு பிரதேசத்தைத் தம் ஆட்சியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு வைத்திருந்தால், அந்தப் பிரதேசத்தினர் தனிநாட்டுக்கு உரிமை உடையர் என்ற மரபு கிழக்குத் திமோரில் நடைமுறைக்கு வந்ததாகப் பரவலாகத் தம்மிடையே பேசிக்கொண்டு, அந்த நாளைக் கரிநாளாகப் பார்க்கச் சிங்களத் தீவிரவாதிகள் தொடங்கியுள்ளனர். ரணில் - பிரபாகரன் உடன்பாட்டை முறித்தெறிய வேண்டுமென்ற உரத்த குரலுடன் பிக்குகள் கொழும்பில் தொடர் உண்ணா நோன்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போரட்டத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியின் நேரடி ஆதரவும் உண்டு.
சிங்களவரின் இந்த உளநிலையை உளத்திருத்தியே, தன்னாட்சி அதிகாரத்துக்கான இடைக்கால அமைப்பு ஆலோசளைகளைத் தமிழர் 2002இல் முன்வைத்தனர். அந்த ஆலோசனைகளைச் சிங்களவர் எப்பொழுதும் பரிசீலிக்கவே இல்லை. இடைக்கால அரசியல் தீர்வுக்கான இந்த ஆலோசனைகள், இலங்கையை ஒரே நாடாகக் கணிப்பன. அங்கே தமிழருக்குத் தன்னாட்சிப் பகுதியை நிலை நிறுத்துவன. உலக நாடுகள் பலவற்றில் இத்தகைய சிக்கல்கள் விட்டுக் கொடுப்புகளாலேயே தீர்ந்துள்ளன.
மாவோயிஸ்டுகள் நேபாளத்தில் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பி, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பொழுது மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்வதற்காக, அதுவும் நேபாளத்தைப் பல் இனங்களின் கூட்டாட்சி அமைப்பாக மாற்ற உடன்பட்டுள்னர். நேபாளத்தின் தெராய்ப் பிரதேச மக்களின் வேண்டுகோளை ஏற்றுக் கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்கப் போவதாக மாவோயிஸ்டுகளும் பிரதமர் கொய்ராலாவும் சேர்ந்து அறிவித்துள்ளனர். ஆயுதக் களைவுக்கு மாவோயிஸ்டுகள் உடன்பட்டனர். மன்னராட்சி அங்கு முற்றாக நீக்கப்படவுள்ளதே இதற்கு முதற்காரணமாகும்.
வடக்கு அயர்லாந்தில் அயர்லாந்துக் குடியரசுப் படையினர் ஆயுதக் களைவுக்கு உடன்பட்டமைக்கு, அவர்களை எதிர்க்கும் யூனியனிஸ்டுகளின் விட்டுக் கொடுப்பே காரணமாகும். மக்களாட்சியுள்ள தன்னாட்சி அரசு வடக்கு அயர்லாந்தில் அமைய உள்ளது. 7.3.2007இல் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆச்சரியமென்னவென்றால் எதிரும் புதிருமாக இருந்த குடியரசுக் கட்சியனரும் யூனியனிஸ்டுகளும் ஒரே கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 26.3.2007இள் அரசு அமையவில்லை எனில், பிரித்தானியா மற்றும் அயர்லாந்து அரசுகள் இணைந்து வடக்கு அயர்லாந்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்.
ஐரோப்பிய ஒன்றியம் வலுப்பெற, அதற்கான தனி நாணயம் தேவை எனத் தீர்மானித்த பின்னர், யூரோ நாணயம் புழக்கத்தில் வந்தது. பிரித்தானியாவைத் தவிர ஏனைய உறுப்புரிமை நாடுகள் யூரோவைத் தம் நாணயமாக்கின. ஆனாலும் யேர்மனியின் பேர்லின் நகரத்தவர் சிலர், தமக்குத் தனி நாணயம் வேண்டுமெனத் தீர்மானித்து, பெர்லினர் நாணயத்தைப் புழக்கத்தில் விட்டுள்னர். யூரோ நாணயத்தால் ஒன்றுபட்ட ஐரோப்பாவில், இத்தகைய நாணயப் புழக்கங்களுக்கு, தன்னாட்சி முயற்சிகளுக்கு இடமுண்டு. விட்டுக் கொடுப்பே காரணம்.
சிங்களவர் விட்டுக் கொடுக்காததால், இறைமையும் தன்னாட்சியும் உடைய நாடாகத் தமிழீழம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை எனத் தமிழர் தரப்பில் 1976இன் வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தின் பின்னர் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்கு எதிரானவர் சிங்கள புத்த இனவெறி முன்னெடுப்பாளர்களே. அவர்கள் விட்டுக் கொடுத்தாலன்றி இலங்கையில் அரசியல் தீர்வு வராது.

Saturday, February 10, 2007

இராஜபக்சாவின் வருகையும் தமிழகத்தின் கடமையும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்,

தெற்காசியக் கூட்டமைப்பின் 14ஆவது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்பிரல் 3, 4 நாள்களில், புதுதில்லியில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெற்காசியாவின் ஒவ்வொரு நாட்டுத் தலைவரையும் நேரடியாகச் சென்று அழைப்பைக் கொடுத்து வருகிறார்.
புதிதாக இணைந்துள்ள ஆப்கானிஸ்தானுடன், இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், பூடான், மாலைதீவு ஆகியன இந்தக் கூட்டமைப்பில் உள்ள ஏழு நாடுகள்.
ஆண்டுக்கு ஒருமுறை உச்சி மாநாடு நடக்கவேண்டுமென்பது மரபு. ஆனாலும் இதுவரை 13 மாநாடுகளே நடந்துள்ளன.
1985இல் முதலாவது உச்சி மாநாடு வங்காள தேசத் தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. அடுத்த 10 ஆண்டுகளில் 8 உச்சி மாநாடுகளே நடைபெற்றன. அதற்கடுத்த 10 ஆண்டுகளில் 5 உச்சி மாநாடுகளே நடைபெற்றன. 22ஆவது ஆண்டில் 14ஆவது உச்சி மாநாடு நடைபெறப்போகிறது.
நேபாளத் தலைநகர் காத்மண்டுவில், அரண்மனைக்கு எதிரே உள்ள தெற்காசியக் கூட்டமைப்புத் தலைமையகத்துள்ளே போவோருக்கு உற்சாகமற்ற அலுவலகமாகவே அது காட்சி தரும். சுறுசுறுப்பான கண்ணோட்டமே இல்லாத அலுவலர்கள், வெற்று மேசைகள், விடுப்பில் பலர் என அந்த அலுவலகம் செயற்படாமைக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, தொய்வுகளும் தள்ளிப் போடல்களும் நிறைந்த உச்சி மாநாடுகள்தாம்.

முதலாவது 7, 8 திசம்பர் 1985 தாக்கா
இரண்டாவது 16, 17 நவம்பர் 1986 பங்களூர்
மூன்றாவது 2, 3, 4 நவம்பர் 1987 காத்மண்டு
நான்காவது 29, 30, 31 திசம்பர் 1988இசுலாமபாத்
ஐந்தாவது 21, 22, 23 நவம்பர் 1990 மாலே
ஆறாவது 21 திசம்பர் 1991 கொழும்பு
ஏழாவது 10, 11 ஏப்பிரல் 1993 தாக்கா
எட்டாவது 2, 3, 4 மே 1995 புதுதில்லி
ஓன்பதாவது 12, 13, 14 மே 1997 மாலே
பத்தாவது 29, 30, 31 சூலை 1998 கொழும்பு
பதினோராவது 4, 5, 6 சனவரி 2002 காத்மண்டு
பன்னிரண்டாவது 2,3,4,5,6 சனவரி 2004 இசுலாமபாத்
பதின்மூன்றாவது 12, 13, நவம்பர் 2005 தாக்கா

தெற்காசிய நாடுகளுக்குள்ளேயுள்ள இரு தரப்புச் சிக்கல்களே, ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய தெற்காசிய உச்சி மாநாடு, பலமுறை ஒத்திவைப்பதற்குக் காரணமாயின.
நாட்டின் தலைவர் உச்சிமாநாட்டில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்பது விதியும் மரபும். குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் தரத்திலுள்ள தலைவர் கலந்து கொள்ளவேண்டும் என்பேத விதி. அல்லவெனில் அமைச்சர்களின் மற்றும் அதிகாரிகள் மாநாடாகிவிடுமே!
எந்த ஒரு நாடாவது, எந்த ஒரு உச்சி மாநாட்டுக்காவது, தன் உயர் தலைவரை அனுப்ப மறுத்தால் அந்த மாநாடே குலைந்து விடும், ஒத்திவைக்கப்படும். ஒருமுறையல்ல பலமுறை இத்தகைய ஒத்திவைப்புகள் நடந்ததால்தான், 22 ஆண்டுகளில் 14ஆவது மாநாடு நடைபெறப்போகிறது.
முதலாவது எடுத்துக் காட்டு:
2005 பெப்ருவரி 6, 7 இல் தாக்காவில் உச்சி மாநாடு நடைபெறுவதாக இருந்தது. 2004 திசம்பரின் ஆழிப்பேரலைத் துயரங்கள் இலங்ைக, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளில் நீடித்த நிலையிலும் உச்சி மாநாட்ைடக் குழப்பவேண்டாம் எனத் தலைவர்கள் தீர்மானித்தனர்.
நேபாளத்தில் நேரடி மன்னராட்சி 2005 பெப்ருவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் பிரதமர் தாக்கா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளார் என இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரண் கடைசி நேரத்தில் அறிவித்தார். இந்தியாவின் அயலகங்களில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களளைக் கருத்தில் கொண்ட பிரதமர் மாநாட்டிற்குப் போகமுடியவில்லை எனச் சியாம் சரண் கூறியதும் தெற்காசியக் கூட்டமைப்பே குலுங்கியது. நேபாள மன்னருடன் அருகருகே அமர்ந்தால் நேபாள மக்கள் மனமுடைந்து போவார்கள் எனச் சூசகமாகச் சியாம் சரண் தெரிவித்தார். அது மட்டுமல்ல, வங்காள தேசத்தில் இந்தியாவுடன் நெருங்கிய உறவு கொண்ட அவாமி லீக்கின் தலைவர்களுள் ஒருவரான, முன்னாள் நிதி அமைச்சர் சாம்சுல் கிபிரியா சனவரிக் கடைசியில் கொல்லப்பட்டார். எனவே தாக்காவில் பாதுகாப்பு முறையாக இல்லை என்பதைத் தில்லி, அலுவலக முறைப்படி தாக்காவுக்கு அறிவித்தது. இதனால் இந்தியப் பிரதமர் மாநாட்டுக்குப் போக மறுத்தார். மாநாடு திட்டமிட்டபடி நடைபெறவில்லை.
இந்தியப் பிரதமர் உச்சி மாநாட்டுக்குப் போகாதமைக்கு, அவரது அரசுக்குத் துணைநின்ற கூட்டணிக் கட்சிகளே காரணம். போகக் கூடாதென்ற முடிவைப் பிரதமர் எடுக்குமுன் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்க்கட்சியினரையும் கலந்தாலோசித்தார். இடதுசாரிக் கட்சிகள் இதில் கடும் நிலையை எடுத்திருந்தன். நேபாள மக்களுக்குத் துரோகம் செய்யாதீர்கள் என இடதுசாரிகள் பிரதமரிடம் நேரடியாகக் கூறினர். பிரதமரும் அதற்கு மதிப்புக் கொடுத்தார். திடீரென மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 2005 நவமபர் 12, 13இல் நடந்ேதறியது.
இரண்டாவது எடுத்துக் காட்டு:
1999 நவம்பர் 26, 27, 28இல் காத்மண்டுவில் நடைபெறவிருந்த 11ஆவது மாநாடு திட்டமிட்டபடி நடைபெறவேயில்லை. வாஜ்பாய் அப்போது இந்தியப் பிரதமாராக இருந்தார். 1998 மே மாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் அணுகுண்டுகளை வெடித்துப் பரிசோதித்திருந்தன. 1999 மே தொடக்கம் சூலை வரை கார்கில் போர் நடைபெற்று முடிந்திருந்தது. இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் மோசமான சூழ்நிலையை எட்டியிருந்தன. இதற்கு மகுடம் வைத்தாற்போல, நவாப் ஷெரீபிடமிருந்து 1999 அக்டோபர் 12இல் முஷராப் ஆட்சியைப் பொறுப்பேற்றிருந்தார். இராணுவ ஆட்சி பாகிஸ்தானில் வந்ததால் உலகமே அதிர்ந்திருந்த வேளை.
பாகிஸ்தானில் நடந்த இராணுவப் புரட்சியை வரவேற்காத இந்தியா, உச்சி மாநாட்டைக் குலைக்க முயன்றது. தானே நேரடியாக ஈடுபடாமல், அயலவர்களாகிய வங்காள தேசத்தையும் பூடானையும் இந்தியா உசுப்பிப் பார்த்தது. இதை எதிர்த்து இலங்கை அதிபர் சந்திரிகா உறுமினார். அதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் முஷராபை வரவேற்றவர் சந்திரிகா. இராணுவப் புரட்சி உள்நாட்டு விவகாரம் அதற்காக உச்சிமாநாட்டைப் பின்போடமுடியாதென்றார் சந்திரிகா. அவர் அப்பொழுது தெற்காசியக் கூட்டமைப்பின் சுழற்சி முறைத் தலைவர்.
பாகிஸ்தானும் மிரட்டியது. ஆனால் இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை. அந்த உச்சி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறவேயில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 2002இல் அந்த உச்சி மாநாடு காத்மண்டுவில் நடைபெற்றது.
மூன்றாவது எடுத்துக் காட்டு:
1991இல் கொழும்பில் நவம்பரில் ஆறாவது உச்சி மாநாடு நடைபெறவிருந்தது. பிரேமதாசா அப்பொழுது இலங்கையின் குடியரசுத் தலைவர். அவருக்கு இந்தியாவின் மீது உறைப்பான கோபங்கள். 1987இல் இராஜீவின் கொழும்பு வருகையைப் புறக்கணித்துப் பிரதமரான பிரேமதாசா தாய்லாந்து சென்றுவிட்டார். 1990களில் வி. பி. சிங் அரசு பிரேமதாசருடன் கடுமையாக நடந்து கொண்டது. 1991 அக்டோபரில் நரசிம்மராவ் பிரதமாராக இருந்தார். பிரேமதாசாவுக்குப் பாடம் புகட்ட நரசிம்மராவ் எண்ணினார், பூடானை உசுப்பிவிட்டார். பூடான் மன்னர் உச்சி மாநாட்டுக்குத் தாம் வரவில்லை என அறிவித்தார். 1991 நவம்பர் உச்சி மாநாடு குழம்பியது, பின்னர் திசம்பரில் கொழும்பில் நடைபெற்றது.
நான்காவது எடுத்துக் காட்டு:
1990களில் மாலைதீவில் நடைபெற இருந்த ஐந்தாவது உச்சி மாநாட்டைப் பின்போடுவதற்குப் பிரேமதாசா காரணராக இருந்தார். இலங்கையில் இந்தியத் தலையீட்டை (1987-1990) ஒப்புக் கொள்ளாத அவர், இந்தியப் பிரதமருடன் அருகருகே உட்கார மறுத்தார். மாலை தீவு அதிபர் கயூம் கொழும்புக்குச் சென்று பிரேமதாசாவுடன் பேசி, ஒத்திப்போட்ட மாநாட்டை மீண்டும் நடத்தி முடித்தார்.
இராஜபக்சாவின் கொடுங்கோலாட்சி:
இரு தரப்பு உறவுகளை அரசியலாக்கத் தெற்காசியக் கூட்டமைப்பு உச்சி மாநாடுகள் தொடர்ந்து பயன்பெறும் நிலையில், 2007 ஏப்பிரலில் இராஜபக்சே தில்லி வரவிருக்கிறார். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இராஜபக்சா தில்லிக்கு வருவது பிடிக்கவேயில்லை. தில்லி செல்லும் வழியில் தமிழகம் வந்தால் போராட்டங்கள் வெடிக்கும் என்பைதக் கடந்த முறை அவர் தமிழகம் வர முயன்றபோது நடந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டின. தமிழகம் வரத் திட்டமிட்டிருந்த இராஜபக்சா, குருவாயூரிலிருந்து நேரே கொழும்பு சென்றுவிட்டார்.
அன்றைய சூழலில் செஞ்சோலை மீதான குண்டுவீச்சு நிகழ்ச்சிகள் தமிழக மக்களின் உணர்வுகளைப் பூதாகாரமாகத் தூண்டிவிட்டிருந்தன.
1987 இராஜீவ் - ஜெயவர்த்தனா உடன்படிக்ைகயை முறித்து, ஒன்றிணைந்த தமிழர் தாயகத்தை வடக்கு மாகாணமென்றும் கிழக்கு மாகாணமென்றும் பிரித்து, இந்தியாவின் முகத்தில் கரி பூசிய இராஜபக்ச அரசு, 2002 பெப்ருவரி 22இன் இரணில் - பிரபாகரன் புரிந்துணர்வு உடன்பாட்டையும் போர் நிறுத்த உடன்பாட்டையும் மீறி, யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஏ9, நெடுஞ்சாலை மூதூர் செல்லும் ஏ15 நெநடுஞ்சாலை ஆகியவற்றை மூடி, ஏறத்தாழ 7 இலட்சம் தமிழரைப் பட்டினியிலும் நோயிலும் வாடவிட்டு, சம்பூர், மாவிலாறு, வாகரை ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி ஐரோப்பிய நாடுகளின் முகத்திலும் கரி பூசி உள்ளது.
1952 நேரு - கொத்தலாவெலை ஒப்பந்தம், 1958 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம், 1964 சிறீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம், 1965 டட்லி - செல்வநாயகம் ஒப்பந்தம், 1987 இராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் யாவுமே கொழும்பு அரசுகளால் ஒரு தலைப் பட்சமாககக் கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள்.
அனைத்துலக நாடுகளின் அநுசரணையுடனான ஒப்பந்தங்களையோ, தமிழர் - சிங்கள ஓப்பந்தங்களையோ கிழித்தெறியச் சிங்கள அரசுக்கு வெட்கம் இருப்பதில்லை.
இத்தனைக்கும் போலி இடது சாரிகளான 23 பிரிவுகளாலமைந்த இலங்கை இடதுசாரிக் கட்சிகள், இராஜபக்சா அரசுக்கு முண்டு கொடுத்து வருகின்றன. மார்க்சியக் கோட்பாடுகள், லெலினினியத் தத்துவங்கள் யாவையுமே வசதியான போர்வைகளாக்கி, சிங்கள - புத்த இனவெறியை முன்னெடுத்துச் செல்ல, பேரினவாதக் கொள்கைகளுக்கு ஆதரவு தர, பொதுவுடைமையாளராகக் காட்டிக் கொள்ளும் இந்த 23 பிரிவினரும் தம்முள்ளே போட்டி போடுவதுதான் இலங்ைக இடதுசாரி இயக்கத்தின் மெய்நிலை.
இடதுசாரிகளுள் மக்களிடம் அதிகமாக ஆதரவைப் பெற்றவர்கள், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யினர். இவர்கள் ஒற்றையாட்சி இலங்கைக்குள் தமிழர் அடிமைகளாக இருக்கவேண்டும் எனபோர். மகிந்த இராஜபக்சாவின் மகிந்த சிந்தனை என்ற தேர்தல் அறிக்கையின் கருவூலர்கள். 1987இல் இந்தியத் தலையீட்டை எதிர்த்தவர்கள், 2002இன் நோர்வேத் தலையீட்டையும் எதிர்ப்பவர்கள். சிங்கள புத்த இன வெறியர்களான இவர்களுக்கு பொதுவுடைமைக் கொள்கைகள் போலிப் போர்வைகளே.
தமிழர்களைக் கொன்று குவித்த இரத்தக் கறையுடன் இராஜபக்சா:
அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீருடன் ஏதிலிகளாக 20,000 ஈழத்தமிழர்கள் கடந்த சில மாதங்களில் இந்தியக் கரைகளில் ஒதுங்கியுள்ளார்கள், தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் ெகாழும்பில் விடுதிகளிலும் வீடுகளிலும் தகர டப்பாவுள் அடைத்த மீன்களைப் போல் அடங்கி, அடுக்குகளாக வாழ்கின்ற வசதியுள்ள தமிழர் சிலருள்ளும் பலர் கடத்தப் படுகிறார்கள் கொடுஞ்சிறைக்குள் அடைக்கப் படுகிறார்கள், கண்டபடி சுடப்படுகிறார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுடப்படுகிறார்கள்.
யாழ்ப்பாணக் குடாநாடு திறந்தவெளிச் சிறைச்சாலையாகி, உணவு, மருந்து, கட்டுமானப் பொருள், மின்சாரம், எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கிடையே ஆறரை இலட்சம் மக்களைத் தாங்கி அல்லலுறுகிறது.
வவுனியாவிலும் திருகோணமலை - மூதூர் - வாகரையிலும் இரண்டு இலட்சம் தமிழர் நிர்க்கதியாய்த் தவிக்கிறார்கள். கிழக்குப் பல்கலைக்கழகத் துைணவேந்தரைக் கடத்தியவரிகள் இருமாத காலமாக விடுவிக்கவேயில்லை. அம்பாறை மாவட்டத்தில் தமிழர் எவரும் அச்சமின்றி உலவவே முடியாத கொடூரச் சூழ்நிலை.
இஸ்ரேல் வழங்கிய கிபீர் விமானங்களும் பாகிஸ்தான் வங்கிவரும் பல்குழல் பீரங்கிகளும், நாளும் பொழுதும் தமிழ்க் குழந்தைகளையும் பெண்களையும் அப்பாவித் தமிழரையும் குண்டுமாரி பொழிந்து கொன்று குவிக்கின்றன. ஈழத்தில் இரத்த ஆறு பாய்கிறது.
இலங்ைகத் தீவு முழுவதற்குமான ஆட்சித் தலைவர் என்பைத விட ஈழத்தமிழரைக் கொன்று குவிக்கும் ஆட்சித் தலைவர் என இராஜபக்சாவை அழைக்கலாம். அத்தகைய தலைவர் ஏப்பிரலில் வருகிறார், தெற்காசியக் கூட்டமைப்புத் தலைவர்களுடன் கை குலுக்குகிறார்.
பிரேமதாசாவுக்குப் பாடம் புகட்ட 1991இல் ஆறாவது உச்சி மாநாட்டை ஒத்திவைத்தவர் பிரதமர் நரசிம்மராவ். முஷராபுக்குப் பாடம் புகட்ட 1999இல் பதினோராவது மாநாட்டை ஒத்தி வைத்தவர் பிரதமர் வாஜ்பாய். நேபாள மன்னருக்குப் பாடம் புகட்ட 2005இல் பதின்மூன்றாவது மாநாட்டை ஒத்திவைத்தவர் பிரதமர் மன்மோகன்சிங். அண்டை நாடுகளை வழிக்குக் கொண்டுவரத் தெற்காசியக் கூட்டமைப்பின் உச்சிமாநாடுகளைப் பயன்படுத்துவதில் முன்னோடி நிகழ்வுகள் பல உண்டு.
இரத்தக் கறைகள் படிந்த கைகளுடன், அனைத்துலக மேற்பார்வையில் எழுதிய உடன்பாடுகளையும் இலங்கை இந்திய உடன்பாடுகளையும் உள்ளூர் உடன்பாடுகளையும் வெட்கமின்றி ஒரு தலைப்பட்சமாக முறித்து வரும் அரசுத் தலைவரான இராஜபக்சா தமிழகத்துள் வரவே முடியாது. தமிழகத்துள் வரமுடியாதவர் இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கு வந்து செல்லலாமா?
1987 இராஜீவ் - ஜெயவர்தனா உடன்பாட்டுக்கமைய வடகிழக்கை ஈழத்தமிழர் மரபு வழித் தாயகமாக ஏற்க; இந்தியாவின் ஆதரவுடன் நோர்வேயின் அநுசரணையுடன் 2002இல் ஏற்படுத்திய இரணில் - பிரபாகரன் புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துக; அதன்பின் இந்தியா வருக; இராஜபக்சாவிடம் நேரடியாக இதைச் சொல்லவேண்டியது பிரதமர் மன்மோகன் சிங்கின் கடமை; நேபாள மக்களுக்கு 2005இலும், பாகிஸ்தான் மக்களுக்கு 1999இலும் துரோகமிழைக்கக் கூடாதென்ற அதே நிலையை எடுத்து, ஈழத்தமிழருக்கு இப்பொழுது துரோகமிழைக்க வேண்டாம் என இந்தியப் பிரதமரை வலியுறுத்துவது தமிழகத்தின் தலையாய கடனாகும்.

Tuesday, October 03, 2006

தமிழர் ேதசியக் கூட்டமைப்பின் ேதால்வி முகம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
1. ஈழத்தமிழரின் அடிமை வாழ்வு நீங்கவேண்டும்.
2. ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகள் சீரைடயவேண்டும்.
இந்த இரு ேநாக்கங்களுடன் என்னாலான மிகச் சிறிய அளவிலான முயற்சிகளைச் சென்னையிலிருந்து மேற்ெகாண்டு வருகிறேன்.
1. ஈழத்தமிழரின் பாதுகாப்பும் தன்னாட்சியும் ஈழத்தமிழரிடமே இருக்கவேண்டிய ேதவை,
2. 1987-91 கால, ஈழத்தமிழர் - இந்தியப் பொருந்தா நிகழ்வுகளை மறப்பது,
3. இந்தியாவில் அகதிகளின் நலம்,
4. சிங்களப் பைடகளுக்கு இந்தியா உதவக்கூடாதமை,
5. இந்திய நலன்களுக்கு மாறாக ஈழத்தமிழர் செயற்படார் என்ற உறுதி,
6. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை இந்தியா அழைத்துப் பேசுவது,
7. தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் உள்ள தமிழர்களை ஈழத்துக்கு அனுப்புவது,
8. இந்த ேநாக்கங்களை ஒட்டிய கருத்துருவாக்கக் கட்டுரைகள், ஒலி/ஒளி பரப்புகள்,
9. இந்த ேநாக்கங்களை முன்னெடுக்கச் செல்வாக்குள்ள தமிழகத் தமிழர் மற்றும் இந்தியர்களிடம் ஈழத்தமிழர் பால் நல்லெண்ணத்ைத உருவாக்குவது.
போன்றவை என் முயற்சிகளுட் சிலவாக அமைந்து வந்தன.
இந்தப் பின்னணியில் 28.8.2006 முதலாக 23.9.2006 ஈறாக வரையுள்ள மூன்று வார காலப்பகுதியில் நிகழ்ந்தவற்றைப் பதிவு செய்யவேண்டியது என் கடன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே சென்னைக்கு வரும்பொழுெதல்லாம் பழம்பெரும் விடுதலைத் தியாகியும் நாடாளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராசா என்னுடனேயே தங்குவார். ஈழத் தமிழர் இந்திய உறவுகள் மேம்பைடயும் முயற்சிகளுக்கு எனக்கு ஒத்தாசையாக இருப்பார். இதற்காகச் சில மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை இருவருமாகத் தில்லிக்கும் போய் வந்ேதாம்.
தமிழகச் சட்டசபைத் ேதர்தலுக்கு முன் ெபப்புருவரியில் ஒரு சுற்றாகவும், ேதர்தலுக்குப்பின் சூலையில் ஒரு சுற்றாகவும் தமிழகத் தலைவர்களைச் சந்தித்ேதாம். பெப்புருவரியில் நடந்த பல்வேறு சந்திப்புகளின் செய்திகள் வெளிவராதவாறு காத்துக் ெகாண்ேடாம். ேதர்தலுக்குப் பிந்ைதய சூலை மாதச் சந்திப்புக்கு இரா. சம்பந்தனும் வருவார் என மாவை சேனாதிராசா என்னிடம் ெதரிவித்திருந்தார். எனவே தமிழகத் தலைவர்களிடம் அைதக் கடிதமாக முன்கூட்டியே ெதரிவித்திருந்ேதன். தமிழக முதல்வர் கலைஞர், எதிர்க கட்சித் தலைவர் செயலலிதா, மார்க்சிய பொதுவுைடமைக் கட்சி இவை தவிர ஏனைய கட்சித் தலைவர்கள், ஈழத்தவர் இருவரின் வரவை ஆவலோடு பார்த்திருப்பதாக என்னிடம் ெதரிவித்தனர்.
ஒப்பியவாறு இரா. சம்பந்தன் வரவில்லை. எனவே மாவை சேனாதிராசாவும் நானும் இச்சந்திப்புகளைத் ெதாடர்ந்ேதாம். சந்திப்புகளின் செய்திகளும் வெளிவந்தன. இரா. சம்பந்தன் தனது குடும்பச் சூழ்நிலையே வர இயலாமைக்குக் காரணம் எனத் ெதரிவித்திருந்தார். அக்காலத்தில் அவர் இந்தியாவில் இருந்தார். அவருக்குப் பதிலாக வேறொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவர் அனுப்பியிருக்கலாம். இந்தச் சந்திப்புகளின் ேதவை, அவசியம் பற்றி இரா. சம்பந்தன் போதுமான அக்கறை ெகாண்டிருக்கவில்லையென அப்பொழுது எனக்குத் ேதான்றியது.
அடுத்த சுற்றுச் சந்திப்புக்களுக்காக, இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடன் 10.8 முதலாகச் சென்னையில் தங்கி இருக்கப் போவதாகவும் ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மாவை சேனாதிராசா என்னைத் ெதாலைப்பேசியில் ேகட்டுக் ெகாண்டார். அவர்கள் அனைவரும் சென்னை வந்து சேர்ந்த பின் தமிழகத் தலைவர்களைத் ெதாடர்பு ெகாள்வேத ஏற்றது எனக் கருதிய நான், காத்திருந்ேதன். முந்ைதய அநுபவம் பாடமாக இருந்தது.
23.9.2006 அன்று மாவை சேனாதிராசா சென்னைக்கு வந்தார். விரைவில் இரா. சம்பந்தன் தலைமையிலான குழு வந்துவிடும் என எனக்குக் கூறினார்.
28.8.2006
மாலை 5 மணியளவில் வைேகாவின் செயலர் அருணகிரி என்னிடம் வந்திருந்தார். அவர் வெளியிடவுள்ள புத்தகம் ஒன்றின் பக்கங்களைப் பார்த்துத் தவறுகள் இருப்பின் திருத்தித் தருமாறு ேகட்க வந்திருந்தார். ஈழத் தமிழர் ெதாடர்பாகப் பல நூல்களை அவர் வெளியிட்டு வருகிறார். அவற்றை நான் பார்த்துக் ெகாடுப்பது வழமை. தினமணியில் வெளிவந்த மன்னிப்போம்.. என்ற என் கட்டுரையைத் தம் கட்சி ஏடான சங்ெகாலியில் மீள்பிரசுரம் செய்யுமாறு வைேகா தன்னிடம் சொன்னதாகவும், வைேகா என்னிடம் பேச விரும்பியதாகவும், அருணகிரி ெதரிவித்தார்.
சென்னை வரும்போது வைேகாவைச் சந்திக்கிறேன் எனத் ெதரிவித்ேதன். உடனே வைேகாவுடன் ெதாடர்புெகாண்டு, 29.8 மாலை சென்னையில் சந்திப்பதற்கு அருணகிரி ஏற்பாடு செய்தார். மாவை சேனாதிராசாவும் அப்போது உடனிருந்தார். நீங்களும் வாருங்கள் என மாவை சேனாதிராசாவிடம் ேகட்ேடன். நீங்களே சந்தித்து விட்டு வாருங்கள் என்றார்.
29.8.2006
29.8 மாலை 6 மணிக்கு வைேகாவை அவரது இல்லத்தில் சந்தித்ேதன். மறுநாள் 30.8 பிரதமரைச் சந்திக்கத் தில்லி செல்வதாகக் கூறிய வைேகா, பலவற்றை என்னுடன் பேசினார்.
சிங்களத் தலைவர்கள் அடிக்கடி தில்லிக்கு வந்து பிரதமரையும் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் போகிறார்கள், தமிழர் தரப்பு நியாயங்களைக் கூற ஈழத் தமிழ்த் தவைர்களும் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.
ஏற்கனவே குறித்து வைத்திருக்கிறேன், கட்டாயம் பேசுவேன் என்றார்.
ஈழத்தமிழ்த் தலைவர்களைச் சந்திக்கப் பிரதமர் ேநரம் ஒதுக்க வேண்டும் என வைேகா, ெநடுமாறன் ஆகிய இருவரும் மிகத் தீவிரமாகவும், மருத்துவர் இராமதாசு, கி. வீரமணி போன்ற பலர் அடிக்கடியும் போராட்டங்கள் நடத்துவதும், அறிக்ைககள் வெளியிடுவதும் தமிழ் நாட்டில் கடந்த பல மாதங்களாகவே நைடபெற்று வந்த நிகழ்வுகள். ஈழத்தமிழ்த் தலைவர்களைச் சந்திப்பது பற்றி முன்பொருமுறை பிரதமரிடம் வைேகா பேசியபொழுதும், கவனிக்கிறேன் எனப் பிரதமர் வைேகாவிடம் கூறியிருந்தார்.
31.8.2006
30.8 பிரதமர் - வைேகா சந்திப்பின் போது, ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதமர் சந்திக்க ஒப்புக் ெகாண்டுள்ளார் எனவும் பிறவுமான வைேகாவின் பேட்டி 31.8 காலை இதழ்களில் வந்திருந்தது. அன்று காலை 11 மணிக்கு வைேகா என்னைத் ெதாலைப்பேசியில் அழைத்தார், மாவை சேனாதிராசாவையும் அழைத்துக் ெகாண்டு பிற்பகல் 2 மணிக்குத் தன்னைச் சந்திக்க வருமாறு ேகட்டார். நானும் மாவை சேனாதிராசாவும் அவரிடம் சென்றோம்.
எம்மிடம் பல விவரங்களைச் சொன்ன அவர், பிரதமர் உங்களைக் கட்டாயம் சந்திப்பார். அதற்கான உறுதியை என்னிடம் தந்துள்ளார். ஆைணயையும் என் முன்னே இட்டார். நீங்கள் கடிதம் எழுதித் ெதாலைநகலாக உடனேயே அனுப்புங்கள் என்றார்.
வீடு திரும்பியதும் இரா. சம்பந்தனைத் ெதாலைப்பேசியில் மாவை சேனாதிராசா ெதாடர்பு ெகாண்டார். இந்தியாவில் இரா. சம்பந்தன் இருப்பதாகவும் 4.9 சென்னை வருவார் என்றும் அவர் வந்ததும் கடிதத்தைதத் தயாரித்து அனுப்பலாம் என அவரே சொன்னதாகவும் மாைவ சேனாதிராசா என்னிடம் கூறினார். அவர் வரும் வரை காத்திருக்க வேண்டாம், நீங்கள் உடன் கடிதத்ைத அனுப்புங்கள், எனக் ேகட்ேடன். மாவை சேனாதிராசா உடன்படவில்லை.
நான் மனம் ெநாந்ேதன். தமிழ்ச் சாதியின் தலைவிதி இதுவா? என மாவை சேனாதிராசாவிடம் ேகட்ேடன். தமிழ் நாட்டில் பலர் இதற்காகப் பல போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள், கருத்துருவாக்கத்தில் பலர் தம் ேநரத்ைத, பொருளைச் செலவிட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அழுத்தத்ைத உணர்ந்த பிரதமரும் ஒப்புகிறார். நீங்கள் கடிதம் அனுப்புவது முறை. அைத ஏன் பின்போடுகிறீர்கள்? எனக் ேகட்ேடன். இரா. சம்பந்தன் வரட்டும் என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.
01.09.2006
மாவை சேனாதிராசாவும் இரா. சம்பந்தனும் சந்திப்புக் ேகட்டு, இருவரும் ஏற்கனவே ைகயொப்பமிட்டுக் கலைஞருக்கு எழுதிய கடிதத்ைத வெள்ளிக்கிழமை காலை, கலைஞர் வீட்டுக்குக் ெகாடுத்தனுப்பினோம்.
மதியம் கவிஞர் காசி ஆனந்தனும் மனைவியாரும் என்னைத் தற்சேயலாகச் சந்திக்க வந்திருந்தனர். என் ஆற்றாமையையும் ஆதங்கத்ைதயும் அவர்களிடம் சொன்னேன். ஈழத் தமிழர் நியாயங்களை இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்ல நல்ல வாய்ப்பு நழுவி விடும் போலத் ெதரிகிறேத என்ே‏றன். வாங்ேகா சச்சி, ெநடுமாறனிடம் போவோம் எனக் கவிஞர் கூறினார். ேநரே ெநடுமாறனிடம் போனோம். விவரத்ைதச் சொன்னேன். ஏன் இப்படிச் செய்கிறார்கள்? கவலைப் படாதீங்க, எல்லாம் நல்லபடி நடக்கும் எனக் கூறி எங்கள் மூவரையும் வழியனுப்பினார்.
அன்று இரவு மாவை சேனாதிராசாவுக்குத் ெதாலைப்பேசியில் செய்தி வந்தது. 4.9இல் கஜேந்ததிரகுமார் பொன்னம்பலம் வந்துவிடுவார், உடன் பிரதமரைச் சந்தியுங்கள் என்பேத செய்தியின் சாரம் என மாவை சேனாதிராசா என்னிடம் சொன்னார்.
இரா. சம்பந்தன் 5.9 இரவுதான் வருகிறார், அவர் வந்த பின்பு முடிவு செய்வோம் என்பைதயும் மாவை சேனாதிராசா சொன்னார்.
02.09.2006
2.9 காலை ெநடுமாறன் என்னிடம் ெதாலைப்பேசியில் பேசினார். கவலைப் படாதீங்க, எல்லாம் நல்லபடி நடக்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாைளயோ மறுநாளோ வருவார், வந்ததும் தில்லிக்குப் போகலாம் என்றார். மாவை சேனாதிராசாவுக்கும் அத்தைகய செய்தி இரவே வந்துள்ளைத அவரிடம் கூறினேன்.
இதற்கிைடயில் வைேகா என்னை அழைத்தார். 9.9க்குமுன் சந்திப்பு நிகழவேண்டும். 10.9 பிரதமர் வெளிநாடு போக உள்ளார். போனால் 20.9க்குப் பின்னர் தான் நாடு திரும்புவார் என்றார் வைேகா.
கலைஞரோ தமிழ் நாட்டின் முதலமைச்சர். மூத்த அரசியல்வாதி. ஏற்கனவே ஈழத்தமிழரின் சில செய்ைககள் அவரைப் புண்படுத்தியுள்ளன. அவரைச் சந்திக்காமல் பிரதமரைச் சந்திப்பது முறையல்ல. அவருைடய வாழ்த்துகளுடன் செல்வேத ஈழத்தமிழருக்கு நல்லது, எனவே அந்தச் சந்திப்புக்கு முயல்வோம் என்றார் மாவை சேனாதிராசா.
03.09.2006
காலை வேளைகளில் ெதாலைப்பேசியில் அழைத்தால் கலைஞருடன் ேநரில் பேசும் வாய்ப்புகள் உண்டு. என்னோடு உள்ள பரிச்சியத்தால் அவர் பேசுவதுண்டு. எனவே 3.9 காலை 6 மணியளவில் கலைஞர் இல்லத்துக்கு அழைத்ேதன். அவர் உடற் பயிற்சியில் இருக்கிறார் என்றார்கள். குழப்பாதீர்கள் பின்னர் அழைக்கிறேன் எனக் கூறிய நானே ேநரில் போய்ப் பேசுவேத முறை எனக் கருதினேன். அன்று முற்பகலில் உதவியாளர்களிடம் பேசினேன். உங்கள் கடிதத்ைத இன்னமும் பார்க்கவில்லை என்றார்கள்.
எனக்கு மனம் ேகடகவில்லை. இரா. சம்பந்தன் வரும் வரை பார்த்திருப்பதா? மாவை சேனாதிராசா கடிதம் எழுதினால் என்ன? 3.9 காலை 9 மணிக்கு மருத்துவர் இராமதாசின் உதவியாளரைத் ெதாலைப்பேசியில் அழைத்ேதன். மருத்துவர் இராமதாசே ேநரில் பேசினார். பத்து மணிக்குச் சந்திப்போம் என்றார். மாவை சேனாதிராசாவும் நானும் சென்றோம். 22 உறுப்பினருள் 10 உறுப்பினராவது சேர்ந்து செல்லவேண்டும் பிரதமரிடம் விவரங்களைச் சொல்லுங்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள் என வாழ்த்தி அனுப்பினார்.
இரா. சம்பந்தன் சென்னைக்கு வராமல் எைதயும் செய்யமுடியாது என்பதில் மாவை சேனாதிராசா முடிவாக இருந்தார்.
04.09.2006
8.9 அல்லது 9.9இல், பிரதமரைச் சந்திக்கப் போகிறோம். உங்களைச் சந்திக்காமல் பிரதமரைச் சந்திப்பதும் முறையல்ல. 7.9 காலை எமக்கு நியமனம் தாருங்கள் எனக் ேகடடு 4.9 நாளிட்ட கடிதம் ஒன்றை மாவை சேனாதிராசா எழுத, அைதயும், 1.9 கடிதப் படிையயும் இைணத்துக் ெகாண்டு, 4.9 காலை 9 மணிக்கு ேநரில் கலைஞரின் இல்லம் சென்றேன். அங்குள்ள உதவியாளர் யாவரும் அன்புடன் என்னை வரவேற்று, கடிதங்களைப் பெற்றுக் ெகாண்டு, உரிய நடவடிக்ைக எடுப்பதாகக் கூறினர். மாலையில் ெதாடர்பு ெகாள்ளுங்கள் என்றனர்.
மாவை சேனாதிராசாவும் நானும் மாறி மாறிக் கலைஞரின் உதவியாளருடன் ெதாடர்பு ெகாண்டவாறிருந்ேதாம். சாதகமான பதில் வரவேயில்லை.
06.09.2006
5.9 மாலை சம்பந்தன் சென்னை வந்தார். 6.9 காலை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் இருவரும் சென்னை வந்தனர். சிவாஜிலிங்கம் சென்னையிலேயே தங்கியிருந்தார். மாவை சேனாதிராசா, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் நால்வரும் 6.9 மதியம் எனதில்லத்தில கூடிப் பிரதமரின் சந்திப்புப் பற்றிப் பேசினோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்ைத இந்தியா அங்கீகரிக்குமாறு பிரதமரிடம் ேகாருவது என்ற கருத்தில் அனைவருக்கும் ஒற்றுமை இருந்தது.
இரா. சம்பந்தன் சென்னயைில் இருந்தாராயினும் அவர் இந்த நால்வரையும் 6.9அன்று சந்திக்கவில்லை. இவர்களும் அவரைச் சந்திக்கவில்லை.
ெநருப்பை மடியில் கட்டிக்ெகாண்டிருப்பது போன்ற உணர்வு எனக்கு. பிரதமர் சந்திக்க ஒப்புதல் தந்துள்ளார். சந்திப்புக்கு ேநரம் ஒதுக்கக் ேகட்டு நாம் அவருக்குக் கடிதம் அனுப்பவில்லை. 30.8இல் ஒப்புதல் தந்தவர், 10.9இல் வெளிநாட்டுக்குப் புறப்பட இருப்பவர், ஏேதா நாம் ேகட்ட உடனே ேநரம் ஒதுக்குவார் என்ற துணிவு 6.9 வரை எமக்கு இருப்பது அசாத்தியத் துணிவுதான் எனக் கருதினேன். ஆனாலும் உந்துதலை விடாமல் கடிதம் அனுப்புவோமா எனத் ெதாடர்ந்து ேகட்டுக் ெகாண்டிருந்ேதன். விதியே விதியே தமிழ்ச் சாதிைய என்ன செய்தாய்? என்ற என் மனக் குமுறலை அேத சொற்களால் இந்த நால்வரிடமும் கூறினேன்.
7.9 காலை எனதில்லத்தில் இந்த ஐவரும் சந்திப்பது என இரா. சம்பந்தனிடமிருந்து ெதாலைப்பேசிச் செய்தி வந்தது.
07.09.2006
காலை 10.30 மணியளவில் எனதில்லத்தில் இந்த ஐவரும் கூடினர். நானும் அங்கிருந்ேதன். பிரதமர் எங்களைச் சந்திக்க ஒப்பமாட்டார், எனவே நியமனம் ேகட்டு அவருக்குக் கடிதம் எழுதுவதில் பயனில்லை என்றார் இரா. சம்பந்தன். மற்ற நால்வருக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடில்லை. அைத அவர்கள் ஒவ்வொருவராக விளக்கிக் கூறினர்.
பிரதமர் அலுவலகத்தில் என்ன செய்வார்கள் என முன்கூட்டியே முடிவு செய்வதற்கு எமக்கு உரித்தில்லை. பிரதமர் அலுவலகம் செய்ய வேண்டிய முடிவை நாம் இங்கிருந்து செய்யவேண்டாம். மூன்று படி நிலைகளாக முயல்வோம். பிரதமருக்குக் கடிதம் எழுதுவோம், கலைஞருக்குக் கடிதம் எழுதுவோம், பிரதமரிடம் என்ன ேகட்கப் போகிறோம் என்பைதயும் எழுதி வைத்திருப்பபோம் என அழுத்தம் திருத்தமாகச் சம்பந்தனிடம் கூறினேன்.
தமிழகத்தின் முதல்வர் கலைஞர். அவரை மீறி, அவரின் ஒப்புதல் பெறாமல் பிரதமரிடம் போவது முறையல்ல. கலைஞரின் ஒப்புதலைப் பெறுவோம் அதன் பின்னர் பிரதமரிடம் செல்வோம் என்றார் இரா. சம்பந்தன்.
தமிழக சட்டசபைத் ேதர்தலுக்கு முன்னர், பெப்புருவரி 2006இல், மாவை சேனாதிராசாவும் நானும் கலைஞரைச் சந்தித்து நீண்ட ேநரம் உரையாடியிருந்ேதாம். கலைஞருைடய வழிகாட்டலில் தில்லியுடன் ெதாடர்பு ெகாள்ள விரும்புகிறோம் என்று அப்ெபாழுது அவரிடம் கூறினோம். நீங்கள் ேநரே தில்லியுடன் ெதாடர்புெகாள்ளுங்கள், என அவர் அப்பொழுது சொன்னார். அதற்குரிய வலுவான காரணங்களையும் கலைஞர் எமக்கு விளக்கினார்.
ஈழத்தமிழருக்கு நன்மை எனில் கலைஞர் ஒரு பொழுதும் குறுக்ேக நிற்கமாட்டார். ஈழத் தமிழர் தமக்குரியைத விரைந்து பெறவேண்டும் என்பேத கலைஞரது உளமார்ந்த விருப்பம். அவர் தில்லிக்கு எங்களைப் போகச் சொல்லிவிட்டார். எனவே கலைஞரைக் காரணம் காட்டிச் சந்திப்பபைத் தவிர்க்கவேண்டாம் எனக் கூறினேன். அந்தச் சந்திப்பில் நிகழ்ந்தைத இரா. சம்பந்தனுக்கும் மற்ற நால்வருக்கும் மாவை சேனாதிராசா விரித்துக் கூறினார்.
மதியம் 1.30 மணியளவில் கலைஞருக்கான தமிழ்க் கடிதத்ைத முதலில் நான் எழுதினேன். பிரதமருக்கான ஆங்கிலக் கடிதத்ைத இரா. சம்பந்தன் எழுதினார். இரண்ைடயும் நானே தட்டச்சுச் செய்து ெகாடுத்ேதன். சம்பந்தன் ைகயெழுத்திட்டுத் தந்தார். பிரதமரின் இல்ல மற்றும் அலுவலகத் ெதாலைநகல் எண்களைத் ேதடிக் ெகாடுத்ேதன். ெதாலைநகலை அனுப்பிவிட்டதாக மாவை சேனாதிராசா எம்மிடம் வந்து கூறிய பொழுது 7.9.2006 மணி பிற்பகல் 2.30. கலைஞருக்கும் ெதாலைநகலாகக் கடிதம் போய்ச் சேர்ந்தது.
சரி பிறகு சந்திப்போம் எனச் சம்பந்தன் எழுந்தார். பிரதமருக்கு என்ன சொல்லப் போகிறோம் என்பைதத் ெதளிவாக்கி, எழுத்தில் தயாரித்து முடிப்போம் என நான் வலியுறுத்த, சம்பந்தன் மீண்டும் அமர்ந்தார். எழுதினார். தட்டச்சு நிலையில் சரி பார்த்த பிறகு போகலாம் என்றேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தக் கடிதத்ைதத் தட்டச்சுச் செய்ய முன்வந்தார். தட்டச்சுப் படிகளுள் ஒன்று இரா. சம்பந்தனிடம் மற்றது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் என்ற நிலையில் அன்றைய கூட்டம் கலைந்தது.
ெதாலைநகலில் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினோம் என்பைத வைேகாவுக்கும் ெநடுமாறனுக்கும் கூறினேன். வைேகா ெதன் மாவட்டமொன்றில் இருந்தார். பின்னர் அன்றிரவு அவராகவே என்னுடன் பேசினார். நாளை சந்திப்பு நிகழலாம் போலத் ெதரிகிறது என்றார்.
7.9.2006 காலை 10.30 மணிக்குக் கூடியபொழுது, எங்களுள் பலருக்கு இருந்த கருத்ெதாற்றுமையில், பிரதமரைச் சந்திக்கும் வரை இது ெதாடர்பான செய்திகள் வெளிவரக் கூடாெதன்பதாகும். ஆனால் கூட்டமாக நாம் கலந்துரையாடிக் ெகாண்டிருந்த பொழுேத, சிவாஜிலிங்கத்தின் ெதாலைபேசிக்குச் செய்தியாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்தன. அது மட்டுமல்ல, அந்த அழைப்புகளுக்கு இரா. சம்பந்தன் பதில் கூற வேண்டுமெனவும் சிவாஜிலிங்கம் விரும்பினார்.
பிரதமரைச் சந்திப்பது பற்றிய செய்திகளை, பிரதமர் சந்திப்பு முடியும் வரை எங்கள் தரப்பிலிருந்து எந்தக் கசிவும் இருக்கக் கூடாெதன முடிவு செய்ேதாம்.
08.09.2006
8.9.2006 காலை 10.30 மணி. பிரதமர் அலுவலகத்திலிருந்து என்னைத் ெதாலைபேசியில் அழைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்? விமான நிலையத்திலிருந்து எத்தனை கிமீ. தூரத்தில்உள்ளீர்கள்? அடுத்த விமானம் எப்பொழுது? விவரங்களைத் தயாரித்து என்னை அழைக்கமுடியுமா? எனக் ேகட்டுத் தன் பெயரையும் ெதாலைபேசி எண்ைணயும் அந்த உதவியாளர் என்னிடம் தந்தார்.
பயண ஒழுங்குகளையும் பிரதமர் அலுவலகத் ெதாடர்பையும் நான் கவனிக்க, உறுப்பினரைத் திரட்டும் முயற்சியில் மாவை சேனாதிராசா ஈடுபட்டார். விமானச் செலவுகள் பற்றி உடனடியாகக் கவலை வேண்டாம், நான் இப்பொழுது பொறுப்பு நிற்கிறேன், பிறகு பார்ப்போம் என்றேன்.
பிற்பகல் 1.45க்கு விமானம் உள்ளைதயும் பயணச்சீட்டுகள் பெறமுடியும் என்பைதயும் மதுரா ரவல்ஸ் வி. ேக. டி. பாலன் உறுதி செய்தார். இந்த விவரங்களை நான் மாவை சேனாதிராசாவிடம் சொல்லி, ஏனைய உறுப்பினரைத் திரட்டி மதியம் 12 மணி அளவில் விமான நிலையம் போக ஆயத்தமாகச் சொன்னேன். பிரதமர் அலுவலகத்திற்கும் இந்தத் தகவலைச் சொன்னேன். தாம் சொல்லும் வரை விமான நிலையம் போகவேண்டாம் எனவும், ஆயத்தமாக இருக்கும் படியும் பிரதமர் அலுவலக உதவியாளர் என்னிடம் கூறினார்.
இதற்கிைடயில் அடுத்த விமானம் எத்தனை மணிக்கு என விசாரித்ேதன். மாலை 6 மணிக்கு என்றார்கள். அைதயும் பிரதமர் அலுவலகத்தில் கூறிய பொழுது, சந்திப்பதாயின் 1.45 விமானத்திலேயே வந்து விட வேண்டும், பிரதமர் அலுவலகத்துள் செயலாளர் போயுள்ளார், வந்ததும் சொல்கிறேன், காத்திருங்கள் என்றார் பிரதமர் அலுவலகத்தின் அந்த உதவியாளர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பத்மினி சிதம்பரநாததனும் பயணப் பொதிகளுடன் எனதில்லம் வந்து சேர்ந்தனர். சம்பந்தனும் சிவாஜிலிங்கமும் ேநரே விமான நிலையம் வந்துவிடுவதாகக் கூறினார். ெதாடர்பாக இருங்கள் நாம் சொன்னதும் புறப்படலாம் என ஆயத்த நிலையில் அவர்களை வைத்திருந்ேதாம்.
1 மணியளவில் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு எனக்கு வந்தது. நியமனத்ைத உறுதிசெய்ய முடியவில்லை. வைேகாவுடன் ெதாடர்பாக இருங்கள் அவருக்கு விவரம் சொல்கிறோம், வெளிவிவகார அமைச்சிடமும் பேசி வருகிறோம் என்றார்கள்.
இதற்கிைடயில் மாவை சேனாதிராசாவுடன் ெகாழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினரும் ெதாடர்பாக இருந்தனர். அவர்களும் இந்தச் சந்திப்புப் பற்றி உற்சாகமாகப் பேசி ஊக்குவித்து வந்தனர்.
உடனுக்குடன் வைேகாவிற்கு விவரம் சொன்னோம். அவரும் பிரதமர் அலுவலகத்ேதாடு ெதாடர்ெகாண்டு வந்தார். 8.9 இரவு ஒரு கூட்டத்திலிருந்த வைேகாவைப் பிரதமர் அலுவலகம் அழைத்து, வெளிநாட்டுப் பயணத்தின் பின்னரே சந்திப்பு என்பைத எம்மிடம் ெதரிவிக்கக் கூறினார்கள். இைத எம்மிடம் ெதரிவித்த வைேகா, மறுநாள் 9.9 காலை இரா. சம்பந்தனைச் சந்திக்க விரும்புவதாக என்னிடம் கூறினார். இைத மாவை சேனாதிராசாவிடம் ெதரிவித்ேதன். குழுவாகப் போவெதன முடிவாயிற்று.
தில்லிப் பயணத்துக்காகப் பயணப் பொதிகளோடு எனதில்லம் வந்த பத்மினி சிதம்பரநாதன் வெளியே விடுதியில் தங்கியிருக்க விருப்பமில்லை என்றதால் எனதில்லத்திலேயே தங்குவது என முடிவாயிற்று. மாவை சேனாதிராசா ஏற்கனவே எனதில்லத்தில் தங்கி இருந்தார்.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்குமுன் சந்திப்பு நிகழ முடியவில்லை. 30.8இல் ஒப்பிய பிரதமருக்கு அடுத்த நாளே கடிதம் அனுப்பி இருப்பின் சூட்ேடாடு சூடாகச் சந்திப்பு நடந்திருக்கலாம். ஈழத் தமிழரின் அண்மைய வரலாற்றில் திருப்பு முனையாக அமைய வேண்டிய சந்திப்பு இவ்வாறு நழுவியமைக்கு யார் காரணம்?
7.9 பிற்பகல் 2.30க்குக் கடிதம் அனுப்புகிறோம், 8.9 காலை 10.30 மணிக்குப் பிரதமர் அலுவலகம் எம்மோடு ெதாடர்பு ெகாள்கிறார்கள். அத்தைகய வேகம் பிரதமர் அலுவலகத்துக்கு இருந்தது. 30.8இல் ஒப்பியதற்கு 7.9இல் கடிதம் எழுதும் வேகம் (?) ஈழத்தமிழர் தரப்பில் இருந்தது.
09.09.2006
முற்பகலில் வைேகாவைச் சந்திக்க இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரை அழைத்துச் சென்றேன். சிவாஜிலிங்கம் வரவில்லை. செய்தியாளரிடம் அவர் ெகாண்ட ெதாடர்புகள் பற்றியும் ேதவையற்ற கசிவுகள் பற்றியும் எச்சரிக்ைகயாக இருக்க முடிவுசெய்ததன் விளைவாகவே அவர் அழைக்கப்படவில்லைப் போலும் என நான் ஊகித்ேதன்.
வைேகா எம்மை அன்புடன் வரவேற்றார். பொன்னாைடகள் அணிவித்தார். நிழற்படங்களை அவரது அலுவலக உதவியாளரே பிடித்துக் ெகாண்டார். செய்தியாளர்கள் எவரும் வரவில்லை. அறைக்குள் நாம் தனியாகப் பேசிக் ெகாண்டிருக்ைகயில் சிவாஜிலிங்கம் வந்து சேர்ந்து ெகாண்டார். 2 மணி ேநரம் கருத்துப் பரிமாறினோம்.
செய்தியாளர் வெளியே காத்திருப்பதாக வைேகாவின் செயலர் என்னிடம் கூறினார். வியப்பாக இருந்தது. தனிப்பட்ட பணிக்காக வந்திருப்பைதயும் முடிந்தால் இந்தியாவில் தலைவர்களைச் சந்திப்பதாகவும் பொதுப்படச் செய்தியாளரிடம் கூறுவதாக ஒப்பிக் ெகாண்டு, வெளியே வந்ேதாம். 3 - 4 இதழ்களிலிருந்து செய்தியாளரும் புைகப்படப் பிடிப்பாளரும் காத்திருந்தனர். செய்தியாளரிடம் ஏற்கனவே ஒப்புக் ெகாண்டவாறு செய்தியைக் கூறி, அனைவரும் எமதில்ல வாயில் வந்ேதாம்.
இரா. சம்பந்தனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் புறப்பட்டனர். சிவாஜிலிங்கத்ைத அழைத்து வந்ேதன். அவர் சினத்துடன் இருந்தார். செய்தியாளரை அழைத்ததன் பின் விளைவுகளைப் பத்மினி சிதம்பரநாதனும் நானும் அவரிடம் கூறினோம். பிரதமரைச் சந்திக்க முன், செய்திக் கசிவுகளில் எனக்கு உடன்பாடில்லை என்பைத நான் அழுத்தமாக அன்று ெதரிவித்ேதன். மாவை சேனாதிராசாவும் உடனிருந்தார். தனக்கும் அதற்கும் ெதாடர்பில்லை என்ற சிவாஜிலிங்கம், தனக்கு இச்சந்திப்பை அறிவிக்காதது பற்றிக் கடிந்தார். பதட்டமான நிலையில் இருந்த அவரைச் சாந்தப்படுத்த முயன்றேன். நல்லது செய்தால் யார் செய்தாலென்ன எனக் கூறினேன். சினந்து வெளியேறினார்.
11.09.2006
பிரதமருக்கு எழுதவுள்ள கடிதத்தின் வரைவு பற்றி ஆலோசிக்க, மாலை 3 மணிக்குக் கூடினோம். ெகாழும்பிலுள்ள இந்தியத் தூதரகமும், தில்லி வெளிவிவகார அமைச்சும் தன்னுடன் ெதாடர்பாக இருப்பதாவும், மூன்றுபேர் அடங்கிய தூதுக்குழுவை மட்டும் அனுப்பும்படி ேகட்டுள்ளதாகவும் இரா. சம்பந்தன் கூறினார். தான் முயன்று, தன்னையும் தன்னுடன் மூவரையும் சேர்த்து நால்வராகப் போகலாம் எனக் கூறினார். பத்மினி சிதம்பரநாதனைக் குழுவுள் அடக்கமுடியாெதன அவர் ேநரடியாகக் கூறவில்லை. சுற்றி வளைத்துச் சொன்னார். தன்னைச் சேர்ததுக் ெகாள்ளும்படி சிவாஜிலிங்கம் கூறினார். தமது கட்சியின் அரசியல் குழுத் தலைவர் தாமென்பைதயும் விளக்கினார். செல்வம்தான் தலைவர் அவரைத் தான் அழைப்பது முறை எனச் சம்பந்தன் விளக்கினார்.
தமிழக முதலமைச்சரைச் சந்திக்க விரும்பி, முதலமைச்சரின் உதவியாளருடன் அன்றும் மாவை சேனாதிராசா பேசினார்.
அன்று மாலை பெண் விடுதலை என்ற தலைப்பில் பாரதியார் நினைவு நாள் (11.09) விழா. தமிழக அரசின் விழா. என்னை அழைத்திருந்தனர். காலம் பிந்தினோமெனினும் பத்மினி சிதம்பரநாதனை அந்நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றேன்.
12.09.2006
மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களைப் பார்க்கச் சென்றோம். மா. வரதராசன், ஏ. ேக. பத்மநாதன், இராமகிருஷ்ணன் உள்ளிட்ட 5 தலைவர்கள் இருந்தனர். தீக்கதிர் இதழ் ஆசிரியர் அங்கிருந்தார். சுருக்கமான சந்திப்பு. அன்றும் வெளிேய செய்தியாளர் கூடியிருந்தனர். பிபிசி நிருபருக்கு இரா. சம்பந்தன் பேட்டி ெகாடுத்தார்.
அன்று மாலை, பத்மினி சிதம்பரநாதன் என்னிடம் பேசினார். தான் வந்தேத தில்லி போவதற்காக என்றும் வந்த பின்பு தன்னையும் சேர்த்து அழைத்துச் செல்லாமல் விட்டு விட்டுச் செல்ல முயல்வதாகவும் மிக மனம் ெநாந்து கூறினார்.
தமிழக முதலமைச்சரைச் சந்திக்க விரும்பி, முதலமைச்சரின் உதவியாளருடன் வழமைபோல அன்றும் மாவை சேனாதிராசா பேசினார்.
13.09.2006
அதிகாலை மாவை சேனாதிராசாவுடன் பேசினேன். பத்மினி சிதம்பரநாதனைத் தில்லிக்கு அழைக்காமல் விட்டுச் செல்வது உசிதமல்ல. திட்டமிடாமல் நடந்து ெகாண்டதால் வந்த விளைவு. இப்பொழுதாவது இரா. சம்பந்தனுடன் பேசுங்கள், அழைத்துச் செல்லுங்கள் என்றேன்.
இந்திய அரசு கடந்த 1983-91 காலப்பகுதியில் நடந்து ெகாண்ட முறைகள், அவற்றுக்கு நாம் ஈடு ெகாடுக்கமுடியாததால் ஏற்பட்ட பின் விளைவுகள், இந்திய அரசுக்குள்ளே எமக்கு எதிரானவர்கள் எம்மிைடயே பிளவுக்கு முயல்வார்கள் என யாவற்றையும் விரிவாக என் அறிவுக்கு எட்டியைத மாவை சேனாதிராசாவுக்கு விளக்கினேன்.
இந்திய அரசு பெயரிட்டு ஐந்து போரை அழைத்திருப்பதாகவும், இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அைடக்கலநாதன் ஆகியோருக்குத் தனித்தனி அழைப்புகளையும் விமானப் பயணச் சீட்டுகளையும் ெகாழும்பில் இந்தியத் தூதரகம் வழங்க உள்ளதாகவும் இரா. சம்பந்தன் சொன்னதாக மாவை சேனாதிராசா என்னிடம் கூறினார்.
இந்திய வெளிநாட்டு அமைச்சகத்தில் இைணச் செயலாளர் மோகன் என்பவருடனும், ெகாழும்பு இந்தியத் தூதரகத்தில் துைணத் தூதர் மாணிக்கம் என்பவருடனும் இரா. சம்பநதன் பேசி வருகிறார் என்பைதயும் மாவை சேனாதிராசா என்னிடம் கூறியிருந்தார். 18.9 ெதாடக்கம் 21.9 வரை அல்லது 19.9 ெதாடக்கம் 22.9 வரை தில்லியில் தங்கவேண்டியிருக்கும் எனவும், இந்திய அரசின் விருந்தினர்களாகத் தங்குவோம் எனவும் மாவை சேனாதிராசா கூறினார்.
மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்து, கி. வீரமணியுடன் பகல் 12 மணிக்குச் சந்திப்பு. நான் போகவில்லை. ஏனைய ஐவரும் போய் வந்தனர். கலைஞருடனான சந்திப்பை ஏற்படுத்த வேண்டுமென கி. வீரமணியிடம் மாவை சேனாதிராசா ேகட்டுக் ெகாண்டார். கலைஞருக்கு அனுப்பிய கடிதப் படியையும் ெகாடுத்தார்.
மாலை 4 மணிக்கு வீட்டுக்குள் நுழைகிறேன், பத்மினி சிதம்பரநாதனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சூடாகவே ேபசிக்ெகாண்டிருந்தனர். தான் சென்னைக்கு வந்த காரணத்ைதயும் பின்னணியையும் சூழ்நிலையையும் பத்மினி சிதம்பரநாதன் கூறிக் ெகாண்டிருந்தார்.
மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்து, மாலை 5 மணிக்கு, பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் சந்திப்பு. இல. கேணசன், சுகுமாரன் நம்பியார், குமாரவேலு ஆகியோர் இருந்தனர். யாவரும் போயிருந்ேதாம். விரிவான விளக்கமான கலந்துரையாடல். இரா. சம்பந்தன் வரலாற்று விவரங்களைச் சொன்னார். திருேகாணமலை பறிபோவைதச் சொன்னார். சிவாஜிலிங்கம் ெதளிவாக விவரங்களைச் சொன்னார். பேச்சு வார்த்ைதயில் அளவுக்கதிகமாக விட்டுக் ெகாடுத்து நடந்த விடுதலைப் புலிகளின் அமைதி ஆர்வத்ைதக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எடுத்துக் கூறினார். தமிழரின் பாதுகாப்புத் தமிழரிடமே இருக்கக் கூடிய அமைதித் தீர்வை ேநாக்கி இந்தியா உதவக் ேகாரினேன்.
செய்தியாளர் வெளியே கூடியிருந்தனர். இரா. சம்பந்தன் பேசினார்.
மாவை சேனாதிராசா ஏற்பாடு செய்து, பழ. ெநடுமாறனைச் சந்திக்கப் போனோம். இரா. சம்பந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சேனாதிராசா மூவருடன் நானும் ஒரே வண்டியில் போனோம்.
தூதுக்குழுவின் எண்ணிக்ைகயையும், யார் எவர் என்பைதயும் தலைவராகிய நீங்கள் தீர்மானியுங்கள். தில்லியிடம் பேசுங்கள். பத்மினி சிதம்பரநாதனைத் தனிமைப் படுத்துவது நல்லதல்ல, அவரையும் சேர்த்துக் ெகாண்டு போங்கள். எனக்குத் ெதரிந்தவர்கள் மூலம் தில்லிக்குப் பேசட்டுமா என்று இரா. சம்பந்தனிடம் கூறினேன். மற்ற இருவரும் ேகட்டுக் ெகாண்டிருந்தனர்.
என்னுைடய தீர்மானங்கள் எப்பொழுதும் சரியானதாகவே இருக்கும். நீங்கள் இது ெதாடர்பாக வேறு யாருடனும் பேசினால் எனக்கும் அதற்கும் ெதாடர்பில்லை எனச் சொல்லிவிடுவேன் என்றார் இரா. சம்பந்தன்.
பழ. ெநடுமாறன் வீட்டில் மாலை 7 மணியளவில் சந்திப்பு. அனைவரும் போயிருந்ேதாம். பிரதமரிடம் என்னென்ன பேசவேண்டும் எனக் ேகட்ேடன். உங்களுக்குத் ெதரியாததா? என்றார். உங்கள் கருத்து என்ன என்பைதக் கூறுங்கள் என்றேன். வரிசைப் படுத்தித் தமது கருத்துகளை ெநடுமாறன் எம்மிடம் ெதரிவித்தார். 15.09.2006 வெள்ளி மாலை இரவுணவுக்கு வாருங்கள் என அவரை மாவை சேனாதிராசா அனைவர் சார்பிலும் அழைத்தார். செய்தியாளர் எவரும் அங்கு வரவில்லை.
14.09.2006
பிரதமருக்கு ஈழத்தமிழர் சார்பில் ெகாடுக்கும் கடித வரைவு தயாரிப்பதில் ஈடுபட்ேடாம். சிவாஜிலிங்கம் வரவில்லை. சுருக்கமாக எழுதவேண்டும் என்பதில் சிலர், நீண்ேட எழுதலாம் எனச் சிலர் கூற, வரைவுக்குரிய பனுவலை இரா. சம்பந்தன் தன் ைகப்பட எழுத, பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தட்டச்சுச் செய்தார். அங்கிருந்ேதார் சொன்னனவும் இருந்தன, சொன்னன பல விடுபட்டும் இருந்தன. சொல்லாதனவும் இருந்தன. 7.9 ெதாடக்கம் 14.9 வரை எழுதிய, எழுதிக்ெகாண்டிருந்த பனுவல் 8 பக்கங்கள் வரை நீண்டது.
இவ்வாறு எழுதிக் ெகாண்டிருக்ைகயில், இரா. சம்பந்தன், என்னைப் பார்த்து, சச்சி, தமிழர் தாயகத்தின் பாதுகாப்புத் தமிழரிடமே இருக்கவேண்டிய ேதவை பற்றிப் பாஜக விடம் நீங்கள் கூறியது மடத்தனமான கருத்து என்றார். நீண்ட எல்லைகளையும் பரந்த நிலப்பகுதியையும் காக்கும் பைடகளை நாம் வைத்திருக்கமுடியுமா? எனக் ேகட்டார்.
அடித்தளத்திலேயே ைக வைக்கிறாரே? சொல்லாட்சி கூடப் பொருத்தமானதாக இல்லையே!
உங்கள் சொல்லாட்சியைப் பொருட்படுத்தவில்லை, 1976 வட்டுக்ேகாட்ைடத் தீர்மானம் எந்தத் தனமானேதா, அந்தத் தனமானதுதான் நான் ெதாடர்ந்து பாஜக விடம் மட்டுமல்ல, இங்குள்ள அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்தி வருகிற கருத்து என்றேன்.
மாவை சேனாதிராசாவும் நானும் அந்தக் கருத்ைத வலியுறுத்தியே தமிழகத் தலைவர்களிடம் பேசி வந்ேதாம். சிவாஜிலிங்கமும் அைதயே தமிழகத் தலைவர்கலிடம் பேசி வருகிறார். மாவை சேனாதிராசாவுக்கு இது நன்றாகத் ெதரிந்தும் அவர் வாய் திறக்கமால் இருந்தமை, தமிழகத் தலைவர்களிடம் தான் பேசியைதத் தன் தலைவரிடமே பேச முயலாமல் மௌனியாக இருந்தமை வியப்பாக எனக்கு இருக்கவில்லை. நாடாளுமன்றப் பதவி அரசியலே அதுதான்.
தில்லியில் எதிர்க்கடசித் தலைவர் எல். ேக. அத்வானியைப் பார்க்க ேநரம் ேகட்டுத் ெதாலைநகல் ஒன்றைத் தயார்த்துக் ெகாடுத்ேதன். மாவை சேனாதிராசா அைத உடனேயே அனுப்பி வைத்தார். அன்று மாலை பொது நிகழ்ச்சி ஒன்றில் என்னைப் பார்த்த இல. கேணசன், என்னிடம் வந்து, ஈழத்தமிழர் பிரதிநிகள் வருகிறார்கள், சந்தியுங்கள் எனத் தானும் தில்லிக்குச் செய்தி அனுப்பினதாகக் கூறினார்.
15.09.2006
பகல் முழுவதும் அவரவர், அவரவர் பணியைப் பார்க்கப் போயினர். தமிழக முதலமைச்சரைச் சந்திக்க விரும்பி, முதலமைச்சரின் உதவியாளருடன் வழமைபோல அன்றும் மாவை சேனாதிராசா பேசினார்.
பத்மினி சிதம்பரநாதன் 16.9 ெகாழும்பு திரும்புவதற்காப் பயணச் சீட்ைட உறுதிசெய்யப் போனார். பின்னர், மாலை கைடத்ெதருவுக்குப் போனார்.
இரவுணவுக்காக மயிலாப்பூருக்கு ெநடுமாறனை அழைத்துக் ெகாண்டு சென்றோம். இரா. சம்பந்தனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அங்கு வரவில்லை. கவிஞர் காசி ஆனந்தனை அழைத்திருந்ேதன். வந்திருந்தார். மாவை சேனாதிராசா விருந்து வழங்கினார்.
16.09.2006
காலையில் பத்மினி சிதம்பரநாதனை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று ெகாழும்புக்கு அனுப்பினார் மாவை சேனாதிராசா.
17.09.2006
இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அைடக்கலநாதன் யாவரும் காலையில் எனதில்லத்துக்கு வந்தனர். மாவை சேனாதிராசாவும் நானும் சேர்ந்து ெகாண்ேடாம். பிரதமருக்குக் ெகாடுக்கவுள்ள கடித வரைவைத் தயாரித்ேதாம்.
கஜேந்திரகுமார் பென்னம்பலமும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஆக்கபூர்வமான கருத்துகளை அவ்வப்போது ெதரிவித்துக் ெகாண்டிருந்தனர். ஆட் கடத்தல்களின் வேகம் விரைவு எண்ணிக்ைக பற்றிச் சுரேஷ் பிரேமச்சந்திரன் விளக்கமாகக் கூறினார். அவற்றையும் உள்ளடக்கியே கடித வரைவை இரா. சம்பந்தன் எழுதிக் ெகாண்டிருந்தார்.
இலங்ைகக்கு ஆயுதங்களை இந்தியா வழங்கக் கூடாது எனக் கடிதத்தில் எழுதுங்கள் எனக் ேகட்ேடன். ேநரில் சொல்லுவோம், கடிதத்தில் எழுத வேண்டாம் எனச் சம்பந்தன் மறுத்துவிட்டார். ேநரில் சொல்வேத சரியாக இருக்கும் என மாவை சேனாதிராசாவும் கூறினார்.
போர்நிறுத்த உடன்பாட்ைடக் ெகாழும்பு முழுமையாக நைடமுறைப்படுத்தத் தில்லி வலியுறுத்த வேண்டும் எனக் கடிதத்தில் எழுதுக எனக் ேகட்ேடன். விடுதலைப் புலிகள் தான் அதிகம் மீறியுள்ளார்கள். எனவே அைதயும் கடிதத்தில் குறிப்பிட முடியாது என்றார் இரா. சம்பந்தன்.
தமிழர் எதிர்பார்ப்புகளை ேநாக்கிய அரசியல் தீர்வுக்கு உடன்படுமாறு ெகாழும்புக்குப் போதுமான தூதரக, பொருளாதார, அரசியல் அழுத்தம் ெகாடுக்காமாறு தில்லியைக் ேகட்டுக் கடிதத்தில் எழுதுங்கள் என்றேன். இது முதல் சந்திப்பு இதில் அரசியல் தீர்வு விடயங்கள் வேண்டாம் என இரா. சம்பந்தன் கூறினார்.
அல்லலுற்று ஆற்றாது துயருரறும் ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியா உடனடியாக உதவவேண்டும் எனவும், அவ்வாறு வழங்கும் உதவிகளை, இலங்ைக அரசின் மூலமாக வழங்காது, தமிழ்த் ேதசியக் கூட்டமைப்புடன் பேசி, தமிழர் அமைப்புகள் மூலம் வழங்குமாறு பிரதமருக்கு எழுதுங்கள் எனக் ேகாரினேன். பயனாளிகளுக்கு ேநரடியாக இந்திய உதவி உடனடியாகக் கிைடக்கவேண்டும் என்றும் இலங்ைக அரசில் தமிழருக்கு நம்பிக்ைக இல்லை என்றும் எழுதுவதாகக் கூறினார் இரா. சம்பந்தன்.
மொத்தம் ஆறு பக்கங்கள் ெகாண்ட கடிதத்தின் இறுதி வடிவைத் தமிழில் பந்தி பந்தியாக வாயால் மொழிபெயர்த்துக் கூறினார், இரா. சம்பந்தன். அனைவரும் ேகட்டுக் ெகாண்டிருந்ேதாம்.
ஒரே ஒரு பக்கத்தில் பெரிய எழுத்துகளில் கடிதச் சுருக்கத்ைதப் புள்ளியிட்டுப் பிரதமருக்குக் ெகாடுப்பதன் அவசியத்ைத நானும் மாவை சேனாதிராசாவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வலியுறுத்த இரா. சம்பந்தன் ஒப்புக் ெகாண்டார்.
18.09.2006
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் இருவரும் எனதில்லம் வந்தனர். கைடசி ேநரத் திருத்தங்களுடன் கடிதத்தின் அச்சுப் படியைத் தயாரித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தில்லிப் பயணம் வெற்றியாக அமைவதாக என அவர்களிருவரையும் வாழ்த்தி அனுப்பினேன்.
19.09.2006
காலை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தில்லிக்கு ஐவரும் புறப்படனர். இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த விடுதியில் தில்லியில் தங்கியிருந்தனர்.
இரவு, இரா. சம்பந்தனின் அறையில், அவரைப் பார்த்ததாகவும் பின்னர் மாவை சேனாதிராசாவைப் பார்த்ததாகவும், தன்னையும் அந்தக் குழுவில் இைணத்துக் ெகாள்ள அவர் செய்த கைடசி முயற்சியும் வெற்றி பெறாமல் சோர்வுடன் தில்லியிலுள்ள தனது அறைக்குத் திரும்பியதாகவும் 27.8 அன்று சென்னையில் என்னிடம் சிவாஜிலிங்கம் கூறினார். 18.9 புதன் மாலையே தில்லி போய்விட்டதாகவும் 22.9 மதிய விமானத்தில் சென்னை திரும்பியதாகவும் சிவாஜிலிங்கம் ெதரிவித்தார்.
21.9.2006
ஈவிரக்கமற்ற ஆயுதபாணிகளே விடுதலைப் புலிகள், என்ற துைணத்தலைப்புடன் இரா. சம்பந்தன் தில்லியில் பேசிய பேச்சின் சாரம் சென்னை இந்துவில் வெளிவந்திருந்தது.
தப்புத் தப்பாய் வெளியிடும் வழமை இந்துவுக்கு உண்டு என்பதால் மற்றொரு ஆங்கில இதழான ெடக்கான் குரொனிக்கிள் பார்த்ேதன். தலைப்பில் அந்த வரி இல்லை. உள்ளே செய்தியில் அேத வரிகள். நான் வியப்பைடயவில்லை.
23.9.2006
22.9 பின்னிரவு மாவை சேனாதிராசா எனதில்லம் வந்தவேைள நான் உறக்கத்திலிருந்ேதன். 23.9 காலை உணவுக்குப்பின் அவர் என்னிடம் பேசினார்.
பிரதமரைப் பார்க்கத் தில்லி சென்றவர்கள் பிரதமரைப் பார்க்கமலே திரும்பினார்கள். பிரதமர் அலுவலக, வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளையும் இைண அமைச்சர் ஒருவரையும் பொதுவுைடமைக் கட்சியினரையும் பார்த்ததாக மாவை சேனாதிராசா என்னிடம் கூறினார். வேதனையுடன் இருந்ேதன். நினைவுக்கு நிகழ்ச்சி ஒன்று வந்தது.
26.8அன்று தமிழ்க் கணினி வளர்ச்சி ெதாடர்பான தமிழக அரசின் உள்ளகக் கருத்தரங்கு ஒன்றிற்கு அழைத்திருந்தனர், போயிருந்ேதன். புலமையாளரையும் பேராசிரியர்களையும் கணினித் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமுைடயோரையும் அரசு அழைத்திருந்தது. மாவை சேனாதிராசாவையும் அழைத்துச் சென்றேன்.
ேதனீர் இைடவேளையின் பொழுது பேராசிரியர் முனைவர் வா. செ. குழந்ைதசாமி என்னிடம் பேசினார். சிங்களவரின் இராஜதந்திர முயற்சிகளால் 60 நாடுகள் வரை ஈழத்தமிழரின் விடுதலை முயற்சிகளுக்குத் தைடயாக உள்ளன. போரில் ஈழத்தமிழர் காட்டும் அேத இறுக்கத்ைதயும் உத்வேகத்ைதயும் இராஜதந்திரத்தில் காட்டுவதில்லையே. உலகம் முழுவதும் ஈழத் தமிழர் பரந்து வாழும் இந்தச் சமயத்தில் சிங்களவரின் இராஜதந்திர முயற்சிகளை முறியடிக்க ஈழத் தமிழரால் முடியவில்லையே சச்சிதானந்தம் என என்னிடம் உரிமையோடு மனம் ெநாந்து கூறினார். பின்னர் அவரிடம் மாவை சேனாதிராசாவை அழைத்துச் சென்றேன். முன்பு என்னிடம் கூறியைத மாவை சேனாதிராசாவிடமும் கூறுங்கள் என அவரிடம் ேகட்டுக் ெகாண்ேடன். அைதயே அவர் திரும்பவும் சொன்னார்.

Thursday, September 28, 2006

மன்னிப்பதும்.. மறப்பதும்... அரவைணப்பதும்..

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சுவாமி விவேகானந்தர், மேற்குலக வெற்றிப் பயணத்ைத முடித்துவிட்டு இலங்ைக வழி இந்தியா திரும்புைகயில், 1897இல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார்.
கீழக்கரை, காயல்பட்டினம், இராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய தமிழக நகரங்களில் இருந்து தமிழரான முஸ்லிம்களும், மும்பையிலிருந்து போராக்கள், பார்சிகள், சிந்திகளான முஸ்லிம்களும் ெகாழும்பு நகரிலும் சிங்களக் கிராமங்களிலும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். 1915இல் முஸ்லிம்களுக்கு எதிரான மாபெரும் கலவரம் மூண்டது. முஸ்லிம்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு, பின்பு இலங்ைகப் பிரதமாரான, சேனநாயக்கா உள்ளிட்ட மூத்த சிங்களத் தலைவர்கள் அக்காலத்தில் திரண்ெடழுந்தனர்.
1927இல் காந்தியடிகளின் இலங்ைகப் பயணத்தின் போது சிங்களத் தீவிரவாதிகளுட் சிலர் காட்டிய எதிர்ப்புகளையும், ஈழத்தமிழரும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸுமாக அளித்த ெநஞ்சார்ந்த வரவேற்பையும், இந்திய விடுதலைப் போருக்காகக் காந்தியடிகளிடம் தமிழர் அளித்த நன்ெகாைடகளையும் மகாேதவ ேதசாய் விரிவாக எழுதி நூலாக்கியுள்ளார்.
மலையகத் ேதயிலைத் ேதாட்டங்களில் பணிக்காகச் சென்ற தமிழகத் ெதாழிலாளர்களையும், ெகாழும்புத் துறைமுகத்தில் பணிக்காகச் சென்ற ேகரளத்துத் ெதாழிலாளர்களையும் திருப்பி அனுப்புமாறு ெதாடர்ச்சியாகப் பல போராட்டங்களைச் சிங்களவர் நடத்தினர். 1920களில் சிங்களத் தீவிரவாதியான ஏ. இ. குணசிங்கா தலைமையில் முளைவிட்ட இந்தப் போராட்டங்கள் 1930களில் கூர்மை அைடந்தன.
மலையாளிகளைத் திருப்பி அனுப்பக் ேகாரிய சிங்களவரின் போராட்டத்தின் கடுமையைத் தணிக்கும் ேநாக்குடன், ேகரளப் பொதுவுைடமைக் கட்சியின் மூத்த தலைவரான ஏ. ேக. ேகாபாலன், 1939இல் ெகாழும்புக்குச் சென்றார். வெள்ளவத்ைதயில் அவர் பங்ேகற்ற மேதினக் கூட்டத்ைத மலையாள எதிர்ப்பாளரான சிங்களத் தீவிரவாதிகள் குலைக்க முயன்றனர். அதன் பின்னர் 1940களின் ெதாடக்கத்தில் மலையாளிகள் ெகாழும்பிலிருந்து முற்றாக வெளியேறினர்.
மலையகத் தமிழ்த் ெதாழிலாளருக்குச் சிங்களவர் ெதாடர்ச்சியாக இழைத்து வந்த ெகாடுமையைத் தணிக்க, மகாத்மா காந்தியின் சார்பில் ஜவகர்லால் ேநரு இலங்ைகக்குச் சென்றார். இலங்ைக இந்தியக் காங்கிசை நிறுவினார். 1939 ஜூலை 26 அன்று, ெகாழும்பு, காலிமுகத் திடலில் அவர் பங்ேகற்று உரையாற்றிய கூட்டத்ைதச் சிங்களத் தீவிரவாதியான ஏ. இ. குணசிங்காவின் அடியாள்கள் குழப்பினர்.
1948இல் இலங்ைக விடுதலை பெற்றதும் சிங்களப் பெரும்பான்மைப் பாராளுமன்றத்தின் ஆயத்தப் பணிகளுள் ஒன்றுதான், தமிழகத்திலிருந்து சென்று மலையகத் ேதாட்டங்களை வளப்படுத்திய ெதாழிலாளரின் குடி உரிமையைப் பறித்த சட்டமாகும்.
மலையகத் தமிழ்த் ெதாழிலாளர் அனைவரையும் திருப்பி அழைக்க வேண்டுமென இந்தியாவிடம் சிங்களவர் கூறினர்; இந்தியா மறுத்தது; அவர்களை நாடற்றவர்களாக்கியது சேனநாயக்கா அரசு. அக்காலத்தில் இந்தியத் தூதராக இருந்த சி. சி. ேதசாயை இலங்ைக அரசு ேகவலாமாக நடத்தியது, அவருக்கு எதிரான போரட்டங்களைச் சிங்களத் தீவிரவாதிகள் முடுக்கினர்.
ேநரு காலத்தில் பல முறை முயன்று ேதாற்றைத, சாஸ்திரி காலத்திலும் இந்திரா காலத்திலும் இலங்ைக பெற்றுக் ெகாண்டது. சிறீமாவோ - சாஸ்திரி மற்றும் சிறீமாவோ - இந்திரா ஒப்பந்தங்கள், சிங்களவரின் இந்திய எதிர்ப்புக் ெகாள்ைககளின் வெற்றி முகங்கள். நான்கு இலட்சம் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும், கச்ச தீவை இலங்ைக எல்லைக்குள் அடக்கவும் இந்தியா ஒப்புக் ெகாண்டதல்லவா?
மலையகத் தமிழர்களைத் திரும்பப் பெற இந்தியா ஓப்பியதற்கு நன்றியாக, 1977இலும் 1983இலும் இனக்கலவரத்தில், ெகாழும்பில் வணிகம் செய்த இந்திய முதலாளிகளைக் ெகாலைசெய்து, அவர்களின் சொத்துகளைச் சிங்களக் கைடயர் சூறையாடினர். நாடற்றவர்களான மலையகத் தமிழர் பலரையும் ெகான்று குவித்தனர்.
கச்ச தீவைக் ெகாடுத்ததற்கு நன்றியாகத் தமிழக மீனவரின் உயிர்களைப் பலி ேகட்டுக் ெகான்று குவித்து, தமிழக மீனவரின் படகுகளைச் சேதராமாக்கி, வலைகளை அறுத்ெதறிந்து, பிடிபட்ட மீன்களையும் இன்றுவரை இலங்ைகக் கடற்பைட பறித்ெதடுத்துச் சென்று வருகிறது.
1971 ஏப்பிரலில் ஜேவிபியின் ஆயுதப் புரட்சியை அடக்க, இந்தியா பைடகளை அனுப்பியது. நன்றிக் கடனாக, 1971 டிசம்பர் வங்கப் போரில், இந்திய வான் பகுதிமேல் பறக்க முடியாத பாகிஸ்தான் விமானங்கள், இந்தியாவுக்கு எதிராகக் ெகாழும்பு விமான நிலையத்தில் தங்கிப் போக, ஈழத்தமிழரின் எதிர்ப்பையும் மீறிச் சிங்கள அரசு பாகிஸ்தானுக்கு உதவியது.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் வெளியாகும் இதழ்கழையும் நூல்களையும் குப்பைகள் என இழித்து, அவற்றின் இறக்குமதியை 1971 முதலாகக் கட்டுப்படுத்தியது.
1983 முதலாக ெகாழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் பலமுறை தாக்குதலுக்குள்ளாயது, தூதரக வாகனங்கள் ெகாளுத்தப்பட்டன. இந்திய எதிர்ப்புக் ேகாஷங்களும் ஊர்வலங்களும் வழமையாகின. இந்தியப் பொருள்களைச் சிங்களவர் வாங்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்ற தைடயையும் ஜேவிபி நைடமுறைக்குக் ெகாணர்ந்தது.
1987இல் இலங்ைக இந்திய ஒப்பந்தத்தில் ஒப்பமிட, ராஜீவ் ெகாழும்பு செல்கிறார். அப்போைதய பிரதமாரான பிமேதாசா, ராஜீவை அவமதிக்கத் திட்டமிட்டுக் ெகாழும்பை விட்டு நீங்கித் தாய்லாந்தில் பயணித்தார். ராஜீவை அவமதித்த பிரேமதாசாவின் அரசியல் குரு, ேநரு பேசிய கூட்டத்ைத 1939 ஜூலை 26இல் குலைக்க வந்த ஏ. இ. குணசிங்கா.
ெகாழும்பில், குடியரசுத் தலைவர் மாளிைக வளாகத்தில் ராஜீவுக்குப் பிரியாவிைட. கடற்பைடச் சிப்பாய் ஒருவன், ராஜீவின் முதுகில் துப்பாக்கிப் பிடியால் கடுமையாகத் தாக்குகிறான். குற்றவாளியான அவனை நீதிமன்றம் சிறையில் அைடக்க, அரசோ அவனை விடுதலை செய்கிறது.
பிரேமதாசா குடியரசுத் தலைவராகிறார். இந்தியாவுக்கு எதிராகப் போர்க்ெகாடி தூக்குகிறார். மாலை தீவில் நடப்பதாக இருந்த சார்க் மாநாட்ைடக் குழப்புகிறார். இந்தியத் தூதர் தீட்சித்ைதப் பிரேமதாசா பலமுறை அவமதித்த நிகழ்வைத் தீட்சித்தின் நினைவுக்குறிப்பு நூல்களில் காணலாம்.
1983 முதலாக, பல இலட்சம் ஈழத்தமிழர் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, இந்திய மக்களின் வரிப்பணத்தில் வாழ்வை ஓட்டவேண்டிய, இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலைக்கும் சிங்களப் பைடயின் வெறியாட்டமே காரணமாகும்.
ஆசிய நாடுகளின் வாக்குகளைப் பிரித்து, இந்திய வேட்பாளர் ஐநா. தலைமைச் செயலாளராக வெற்றி பெறமுடியாதவாறு தானும் ஒரு வேட்பாளரைக் களத்தில் இறக்கி, அவருக்காக உலெகங்கும் சென்று ஆதரவு திரட்டுகிறது சிங்கள அரசு.
விவேகானந்தர் காலம் ெதாடங்கி இன்று வரை, ஏறத்தாழ 100 ஆண்டுகளாக, சிங்கள இனத்தவரின் அரசும், அரசியற் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தனி மனிதர்களும் இந்தியாவின் முகத்தில் திட்டமிட்ேட பலமுறை கரி பூசி வந்துள்ளனர். அவற்றைப் பொருளெனக் ெகாள்ளாது, நிகழ்வுகளை மறந்து, அவர்களின் அடாச் செயல்களை மன்னித்து, ெதாடர்ந்தும் சிங்களவருக்கு நன்மையையே செய்து வருகிறது இந்தியா.
இந்த மாதத்தில் இலங்ைகப் பைடக்கு ராடார் கருவிகளை அன்பளிப்பாகவும் ெகாடுத்துள்ளது. இன்னா செய்தாரை மறப்பதும் மன்னிப்பதும் அவர் நாண நன்னயம் செய்தலும் இந்திய மண்ணேணாடு கலந்த மரபுகள். 999 மனித தலைகளைக் ெகாய்த அங்குலிமாலாவை மன்னித்துப் பண்பட்ட மனிதானாக்கித் தன் சீடராக்கியவர் புத்தர்.
இந்தியாவே ஆயுதங்களைக் ெகாடுத்தது; பயிற்சியை வழங்கியது; நிதியும் வழங்கியது; அைதத் ெதாடர்ந்த 1987-91 காலத்திய நிகழ்வுகளால் இந்தியாவின் கடுஞ் சினத்துக்கு ஈழத்தமிழர் ஆளாகினர்.
13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்ேதவனார் முதலாக, ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள் ஊடாக, இன்றைய அறிஞர், புலவர், பைடப்பாளிகள் வரை, கடந்த இருபத்ைதந்து நூற்றாண்டுகளுக்கூடாக, ஈழத்தமிழரும் இந்தியாவும் எவ்வித பைகமையோ, உரசலோ, எதிர்ப்புணர்வோ இல்லாது, ெகாண்டும் ெகாடுத்தும் ஒருவரை ஒருவர் ஆட்ெகாண்டு, வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் முகத்தில் கரிபூச எப்பொழுதும் எவ்விடத்தும் நினைக்காத ஈழத்தமிழருக்கும் இந்தியாவுக்கும் குறுங்காலம் ஏற்பட்ட கசப்புணர்வுகளையும் பொருந்தாச் செயல்களையும் மன்னிப்பதும் மறப்பதும் மீண்டும் ஒருவரை ஒருவர் அரவைணப்பதும் ஈழத்தமிழரதும் இந்தியாவினதும் கடனல்லவா?
100 ஆண்டுகளாகத் ெதாடர்ந்து உரசியும் கடுமையாக எதிர்த்தும் வரும் சிங்களவரோடு பெருந்தன்மையோடு நடப்பதுபோல, இைடயில் ஒரு சில ஆண்டுகள் இணக்கமற்றிருந்ததற்காக வருந்தும் ஈழத்தமிழருடனான கசப்புகளை மன்னித்து மறந்து பெருந்தன்மையோடு நடப்பது இந்தியாவின் கடன்.

ஈழத் தமிழ் மாணவர் - இந்தியாவில் கல்வி கற்றல்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிதம்பரத்தில் மேல இரத வீதியில் இன்றும் நைடபெற்று வரும் பள்ளியை, முன்னாள் அமைச்சராக இருந்த சுவாமிநாதன் உள்ளிட்ட, சிதம்பரத்தில் சிறந்த மாணவர் பலரை உருவாக்கிய பள்ளியை, 165 ஆண்டுகளுக்கு முன், யாழ்ப்பாணத்தில் திரட்டிய நிதியைக் ெகாணர்ந்து ெதாடங்கியவர் தவத்திரு ஆறுமுக நாவலர்.
கலைஞர் மு. கருணாநிதிக்குத் திருவாரூரில் தமிழ் கற்பித்த தண்டபாணி ேதசிகரின் ஆசிரியரான யாழ்ப்பாணத்து மட்டுவில் க. வேற்பிள்ளை, சிதம்பரத்தில் அப்பள்ளியில் ெநடுங்காலம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
பாண்டித்துரைத் ேதவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்ைத நிறுவிய பின்னர், தமிழ் மொழியில் பண்டித, வித்துவான் வகுப்புகளைத் ெதாடங்க முயன்றபோது, அவ்வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களைப் பெற, யாழ்ப்பணத்துக்குச் செய்தி அனுப்பி, அங்கிருந்த ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் பாடத் திட்டங்களைப் பெற்று, மதுரையில் வகுப்புகளைத் ெதாடங்கினார்.
ஈழத்து வடமராட்சி நீதிபதி கதிரவேற்பிள்ளை ெதாகுத்த அகராதியை மதுரைத் தமிழ்ச சங்கத்தினர் பதிப்பித்து வெளியிட்டனர்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரிகள் இருவரும் யாழ்ப்பணத்தவர்களே; ஒருவர் கறோல் விசுவநாதபிள்ளை; மற்றவர் சி. வை. தாமோதரம்பிள்ளை.
சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றவர்களே பின்னர் இலங்ைக அரசியலில் புகழ் பூத்த சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆகிய இருவரும்.
கும்பேகாணம் கலைக் கல்லூரியில் வெள்ளிநாக்கர் சீனிவாச சாஸ்திரியாருக்கு ஆங்கிலம் கற்பித்தவர் யாழ்ப்பணத்தவரான பேராசிரியர் ஹென்ஸ்மன். அவரின் வழிவந்தருள் ஒருவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றதுடன், அப்பல்கலைக் கழகத்தில் உதவிப் பதிவாளராகவும் கடமையாற்றினார். மற்றறொருவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்று, சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியியலாளராக இருந்தமையால், அவர் பெயரில் தியாகராய நகரில் ஹென்ஸ்மன் சாலை அமைந்தது, அதுவே கண்ணதாசன் சாலையாக இன்று மாறியுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமைக்கவேண்டுமா என ஆராய்ந்த குழுவின் முன்சென்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் அத்தைகய பல்கலைக் கழகம் அமைய வேண்டிய அவசியத்ைத வலியுறுத்தியவர் மட்டக்களப்பு விபுலானந்த அடிகள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் முதல் தலைமைப் பேராசிரியரும் அவரே.
கிண்டியில் பொறியியல் கல்லூரியும் சென்னையில் மருத்துவக் கல்லூரியும், வேலூரில் ெதன்னிந்திய திருச்சைபயின் கிறித்தவ மருத்துவக் கல்லூரியும் ெதாடங்கிய காலங்களில் அவ்வக் கல்லூரிகளின் முதலாவது ெதாகுதி மாணவர் குழுக்களில் யாழ்ப்பாணத்து மாணவர் பலர் இடம் பெற்றிருந்தனர்.
நல்லூரின் டாக்டர் ஈ. எம். வீ. நாகநாதன் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபின் யாழ்ப்பாணம் திரும்பினார். தந்ைத செல்வாவுடன் இைணந்து தமிழர் விடுதலைப் போராளியானார். சென்னையின் இன்றைய புகழ் பெற்ற ேதால் மருத்துவ வல்லுநர் டாக்டர் ஏ. எஸ். தம்பையா ஈழத்துக் காரைநகரில் இருந்து வந்தவர் சென்னையிலேயே படித்தபின் இங்ேகயே தங்கிவிட்டார்.
தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்களான ேக. ஆர். சீனிவாச ஐயங்கார் (பிரேமா நந்தகுமாரின் தந்ைதயார்), கிருஷ்ணசாமி ஐயர் (மகாகவி பாரதியாரின் உறவினர்) நாவலர் சோமசுந்தர பாரதியார், மகாராஜபுரம் சந்தானம் போன்ற பலரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துக் கல்வி நிலையங்களின் தலைவர்களாக்கினர்.
ஈழத்தவர்களான, ம. க. வேற்பிள்ளை பொன்னம்பலபிள்ளை, முத்துத்தம்பிப்பிள்ளை, ெதன்புலோலி நா. கதிரவேற்பிள்ளை (திரு. வி. க. வின் ஆசிரியர்) பொன் முத்துக்குமரன் போன்ற பலர், தமிழகக் கல்விநிலையங்களில் ஆசிரியர்களாகப் பணி புரிந்தனர். பொன். முத்துக்குமரனின் தமிழ் மரபு நூலின் ஒரு பகுதியைப் பெயர்த்துச் சென்னைப் பல்கலைக் கழக இளங்கைலப் பட்ட வகுப்புக்குக்கான பயன்பாட்டுத் தமிழ்ப் பாடநூலில் ஈராண்டுகளின் முன்னர் சேர்த்துள்ளனர். 1960களில் சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்திரன் ேதவேநசன் யாழ்ப்பாணத்து நீர்வேலியை அடியாகக் ெகாண்டவர்.
யாழ்ப்பாணத்தவரான கனகசுந்தரம்பிள்ளையிடம் இராமேஸ்வரத்தில் ஆங்கிலம் கற்றைதத் தன் வாழ்க்ைக வரலாற்றில் இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில், இலங்ைக மாணவர் சங்கத்தின் தலைவராக 1965-66 ஆண்டுகளில் நான் கடமையாற்றிய காலங்களில், சங்கத்தில் 1,200 உறுப்பினர் இருந்தனர். தமிழகம் முழுவதும் 2,000 மாணவர் வரை கல்வி கற்றனர். தவிர, ெகால்கத்தா, மும்பை, புனே, திருவனந்தபுரம், தில்லி, வரணாசி என இந்தியா முழுவதும் பரந்து கல்வி பயின்றனர்.
யாழ்ப்பாணத்தவரான ஓவியச் செய்தியாளரும் மாமனிதருமான, சிரித்திரன் சிவஞானசுந்தரம் மும்பையில் இன்றைய சிவசேனைத் தலைவர் பால் தக்கரேயுடன் ஒரே கல்லூரியில் சமகாலத்தில் கட்டட வரைகலையும் ஓவியமும் பயின்றவர்.
மட்டக்களப்பின் பாலுமேகந்திரா, புனே திரைப்படக் கல்லூரியில் பயின்று, திரைக் கலையில் புலத்துறை முற்றியவராய், சிறந்த இந்தியத் திரைப்படங்களைத் ேதர்வுசெய்யும் இந்திய அரசின் குழுவுக்குத் தலைமை தாங்கியவர்.
புனேயின் வேளாண் கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டும் 4-5 மாணவர்களுக்குக் குறையாமல் ஈழத்துத் தமிழ் மாணவர் பயின்ற காலங்களுண்டு.
வரணாசியின் இந்துப் பல்கலைக் கழகத்தில் பயின்ற கி. இலட்சுமண ஐயரைக் குறிப்பிடுவதா, ெகால்கத்தா சாந்திநிேகதனத்தில் பயின்ற மங்களம்மாளைக் குறிப்பிடுவதா, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ெதாடங்கிய காலம் முதலாகவும் ருக்மணி ேதவியின் கலாச்சேத்திரம் ெதாடங்கிய காலம் முதலாகவும் அவ்வ்விடங்களில் பயின்று வெளியேறிய ஆயிரக்கணக்கான ஈழத்து மாணவரைக் குறிப்பிடுவதா, இன்னும் விவரம் ெதரியாத புகழ்பெற்ற பலரைக் குறிப்பிடுவதா? எைதச் சொல்ல? எைத விட?
தமிழகத்துடன் சிறப்பாகவும், இந்தியத் துைணக் கண்டத்துடன் பொதுவாகவும் ஈழத்தவர் ெகாண்ட கல்வித் ெதாடர்புகளுக்கு இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பு 13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்ேதவனாரும் சாட்சி. இன்றைய அப்துல் கலாமின் ஆங்கில ஆசிரியர் கனகசுந்தரமும் சாட்சி.
இவ்வாறாக ஈழத்தவரும் தமிழகத்தவரும் ெகாண்டும் ெகாடுத்தும் ஒருவரை ஒருவர் ஆட்ெகாண்டு வரும் கல்வித் ெதாடர்புகள் வரலாற்றுப் பெருமை உைடயன. இன்றளவோடு நிற்காமல் காலங் காலமாகத் வரலாறாகத் ெதாடரப் போகின்ற பெருமையும் ெகாண்டன. பார்க்கப் போனால், ஈழத்தவருக்குத் தமிழகத்தில் கல்விகற்க ஓரளவு உரிமை காலங்காலமாக இருந்து வருகிறது.
1950 முதலாக:
பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்தியாவெங்கும் ஈழத்து மாணவருக்குத் திறந்ேத இருந்தன. அடிப்பைடத் தகுதிகள் ஒருவருக்கு இருக்குமானால் மேற்கண்ட படிப்புக்காக, எந்தக் கல்வி நிலையத்திலும் மாணவராகச் சேரலாம். இந்திய அரசும் மாணவருக்கான பல்முறைபுகு நுழைவு ெகாடுத்து ஈழத்து மாணவரின் கல்வி உரிமையை உறுதி செய்தது.
ெதாழில்நுட்பத் துறையிலும் (சிற்பம், சித்த-ஆயுர்வேத மருத்துவம்) நுண் கலைகளிலும் (நாகஸ்வரம், தவில், குரலிசை, நடனம்) சமயக் குருக்கள் துறையிலும் (ஓதுவார், அபரக் கிரியையாளர், வேதாகமம் பயில்வோர்) குருகுல முறைப் பயிற்சிக்காகத் தமிழகம் வருவோர் காலாதிகாலமாகத் தத்தம் குருவையோ குருகுலத்ைதயோ தாமே ேதர்வதும் ஒப்புதல் பெறுவதும் பயிற்சி பெறுவதும் முறை சாராக் கல்வியாதலால் அரசின் தலையீடு இருப்பதில்லை, நுழைவு வழங்குவதிலும் இந்திய அரசு தாராளமாகவே நடந்து வருகிறது.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை. சட்டம், கால்நைட உள்ளிட்ட ெதாழில்நுட்பக் கல்விகளுக்கு ஈழத்து மாணவர் ேநரடியாகச் சேரமுடியவில்லை. அத்துறைகளில் பட்டப் படிப்புக்கும் பட்டமேற்படிப்புக்கும் தில்லியில் உள்ள நடுவண் அரசின் ஒதுக்கீடுகளுக்குள் வெளிநாட்டு மாணவர் சேர்க்கப் பட்டனர். தமிழகத்துக் கல்வி நிலையங்களில் மட்டுமல்ல, இந்தியா வெங்கணும் உள்ள கல்வி நிலையங்களுக்குத் தில்லியில் உள்ள நடுவண் அரசே வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்ைகயைத் தீர்மானித்தது.
நடுவன் அரசின் வெளிநாட்டமைச்சில் அயலக மாணவருக்காக ஒரு பிரிவு; அந்தப் பிரிவின் அலுவலகம் தில்லியில் சாஸ்திரி பவனில் உள்ளது. இந்தியத் ெதாழில் நுட்பக் கல்வி நிலையங்களில் அயல்நாட்டு மாணவர் சேர்க்ைகயை இந்தப் பிரிவு ஒருங்கிைணக்கிறது.
இந்தியாவிலுள்ள எந்த ஒரு ெதாழில் நுட்பக் கல்வி நிலையத்தில், அதுவும் அரசுகள் நடத்துகிற ெதாழில்நுட்பக் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்புக்கும் பட்டமேற்படிப்புக்கும் இந்த அலுவலகமே ஒற்றைச் சாரளமாக இருக்கிறது. வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி, மணிப்பாலில் உள்ள மருத்துவக் கல்லூரி போன்ற தனியார் கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர் சேர்க்ைக இந்தப் பிரிவுள் அடங்குவதில்லை.
தில்லி சாஸ்திரி பவன் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று நிரப்பியோ, ெகாழும்பில் உள்ள தூதரகத்தில் படிவத்ைதப் பெற்று நிரப்பியோ, தாமாகவே பணம் ெகாடுத்துப் படிக்கும் ஈழத்து மாணவர், ஒதுக்கீட்டுக்காக விண்ணப்பித்து இடம் பெற்று, மருத்துவ, பொறியியல், வேளாண், கால்நைடப் பட்டப் பயிற்சிகளை மேற்ெகாண்டனர்.
ெகாழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் ஆண்டுேதாறும் வழங்கும் புலமைப் பரிசில்கள் பெற்று, இந்தியா வந்து ெதாழில்நுட்பக் கல்வி கற்றுத் துறைபோகும் ஈழத்து மாணவரும் உண்டு. அத்தைகய புலமைப்பரிசில் பெற்றுச் சென்னையில் படித்தவருள் நானும் ஒருவன்.
1983-1990 காலப்பகுதி:
இந்தப் பின்னணியில், 1983க்குப் பின்னதான ஈழத்து மாணவரின் நிலையை ேநாக்கவேண்டும். இலட்சக் கணக்கான எண்ணிக்ைகயில் ஈழத்தவர் ஏதிலிகளாக வரத் ெதாடங்கியதும் தமிழகம் தன் கல்விக் கூடங்களின் கதவுகளை மிக அகலமாகத் திறந்து, அவர்களுக்கு எந்த வகுப்பிலும் எவ்விதத் தைடயுமின்றி இடங்ெகாடுக்கலாம் என அறிவித்தபொழுது, ஈழத்தமிழர் ெநஞ்சங் குளிர்ந்தது.
ஆண்டு 8 வரை சேர்பவர்களிடம் எந்த முன் கல்விச் சான்றும் ேகட்காமல், சேர்க்ைகத் ேதர்வும் வைக்காமல் வயதுத் தகுதியை மட்டும் ெகாண்டு சேர்க்குமாறும் எந்த ஒரு வகுப்புக்கும் அரசு ஒப்பிய இட எண்ணிக்ைகக்குமேல் 20% வரையான எண்ணிக்ைக வரை ஈழத்து மாணவரைச் சேர்க்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
9-12 ஆண்டுகள் வரையான வகுப்புகளுக்கு, கல்வித் துறையிடம் மாணவர் சென்று தன்னிலை விளக்கம் கூறி, கல்வித் துறையின் கடிதத்ைதப் பெற்று வருவோரை அேத எண்ணிக்ைக அதிகரிப்பில் எப்பள்ளியும் சேர்க்கலாமெனத் தமிழக அரசு அறிவித்தது.
ெதாழில்நுட்பக் கல்வி நிலையங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் சேர்க்ைக ெதாடர்பாக, ஈழத்து மாணவருக்கு இட ஒதுக்கீடுகளைத் தமிழக அரசு அறிவித்தது. தில்லி நடுவண் அரசின் ஒதுக்கீடுகளும் ெதாடர்ந்தன.
தமிழக அரசின் ஒதுக்கீடு காரணமாக அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 45, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 20, வேளான் கல்லூரிகளில் 10, சட்டக் கல்லூரிகளில் 5, கால்நைடக் கல்லூரியில் 1, ெதாழில் நுட்பப் பயிலகங்களில் 30 இடங்கள் என்ற எண்ணிக்ைகயில் 1984 கல்வியாண்டு முதலாக ஈழத்து மாணவர் சேர்க்ைக ெதாடங்கியது. 1990 ஆனியில் ெதாடங்கிய கல்வியாண்டு வரை இந்த ஒதுக்கீடு ெதாடர்ந்தது.
1991-1995 காலப் பகுதி:
1991 கல்வியாண்டு முதலாக ஈழத்து மாணவர் எந்தக் கல்வி நிலையத்திலும் எளிதாகச் சேரமுடியாத சூழ்நிலை உருவானது. எனினும் பள்ளிகளிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் அந்தந்தச் சூழ்நிலைக்ேகற்ப மாணவர் சேர்க்ைககள் நடந்தன.
மருத்துவம், பொறியியல், வேளாண்மை. சட்டம், கால்நைட உள்ளிட்ட ெதாழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வழங்கிய ஒதுக்கீட்ைட உடனடியாக அரசு நிறுத்தியது.
ஆனாலும் தில்லியிலுள்ள வெளிநாட்டமைச்சின் மாணவருக்கான அலுவலகம், வழமைபோலத் தாமே பணம் செலுத்தும் மாணவருக்கான ஒதுக்கீடுகளையும் புலமைப் பரிசில் மாணவருக்கான ஒதுக்கீடுகளையும் வழங்கி வந்தது. ஈழத்து மாணவர் பலர் தமிழகக் கல்லூரிகளில் இடம் பெற இந்த ஒதுக்கீடு உதவியது.
ஈழத்து மாணவர் சேர்க்ைகயில் இந்த மந்த நிலை 1995 வரை ெதாடர்ந்தது.
1995-2000 காலப் பகுதி:
1995 ஆனியில் தமிழகத்தில் பதவிக்கு வந்த அரசின் தாராளப் போக்கினால், மீண்டும் மருத்துவம், பொறியியல், வேளாண்மை. சட்டம், கால்நைட உள்ளிட்ட ெதாழில் நுட்பக் கல்லூரிகளுக்கான ஒதுக்கீடுகளைப் புதுப்பித்து, கல்வித் துறை ஆைண வழங்கியது. பொறியியலுக்கு முன்பு வழங்கிய 45 இடங்கள் 25 ஆகக் குறைந்தன. மருத்துவத்தில் 20, வேளாண் 10, சட்டம் 5, கால்நைட 1, ெதாழில் நுட்பப் பயிலகங்களில் 30 இடங்கள் என ஒதுக்கிய இடங்கள் ஈழத்து மாணவருக்குக் கிைடத்தன.
தில்லியின் அயலகத் துறை வழங்கிய ஒதுக்கீடுகளும் புலமைப் பரிசில்களும் ஈழத்து மாணவரின் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு உதவின.
புதிய அரசின் மாணவர் சேர்க்ைகக் ெகாள்ைகயால், அனைத்து நிலைக் கல்வி நிலையங்களும் உற்சாகத்துடன் ஈழத்து மாணவரைச் சேர்க்கத் ெதாடங்கின. அதுமட்டுமல்ல தனியார் மருத்துவக் கல்லூரிகள், போரூர், சிதம்பரம், சேலம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் வந்ததால், வசதி பைடத்த ஈழத்து மாணவருக்கு வாய்ப்பாக அவை அமைந்தன. பல் மருத்துவக் கல்லூரிகள் பலவற்றைத் தனியார் ெதாடங்கினர். அங்கும் ஈழத்து மாணவர் பலர் சேர்ந்தனர். பொறியியல் கல்லூரிகள் பலவையும் தனியார் ெதாடங்க, வசதி பைடத்த ஈழத்து மாணவர் அங்கும் பெரும் எண்ணிக்ைகயில் சேர்ந்தனர்.
மழலைப் பள்ளி ெதாடக்கம் பட்டமேற்படிப்பு ஈறாக, துறைெதாறும் துறைெதாறும் தமிழகம் முழுவதும் எவ்வித இடர்ப்பாடும் இன்றி ஈழத்து மாணவர் சேர்ந்து படித்த காலப் பகுதி இஃதாம். எனினும் மருத்துவப் பட்டமேற்படிப்புக்கு நடுவண் அரசின் மருத்துவத் துறை கட்டுப்பாடு விதித்து வந்தது.
2000-2006 காலப் பகுதி:
2000ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், மீண்டும் ஈழத்து மாணவரின் ெதாழில் நுட்பக் கல்விக்கான இட ஒதுக்கீடுகளில் பின்னைடவு ஏற்பட்டது.
ெதாழில்நுட்பக் கல்விச் சேர்க்ைகக்கான தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் ெகாள்ைகயால் பாதிப்புற்ற தமிழகத்ைதச் சேர்ந்த மாணவி ஒருவர், தமிழக அரசின் சிறப்பு ஒதுக்கீடுகளை மாற்றியமைக்கக் ேகாரி நீதிமன்றத்துக்குப் போனார்.
ஈழத்து ஏதிலி மாணவருக்கான இட ஒதுக்கீடு எண்ணிக்ைககளையும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் ெகாண்டுவந்தனர்.
தமிழக மாணவியின் விண்ணப்பத்ைத எடுத்து ேநாக்கிய சென்னை உயர்நீதி மன்றம், அவருக்கு நீதி வழங்கியது. அந்தத் தீர்ப்பில், இலங்ைக மாணவருக்கான இட ஒதுக்கீட்ைடச் தமிழக அரசும் நடுவண் அரசும் சேர்ந்து தீர்க்கவேண்டும் என்ற வரிகளைச் சேர்த்தது. இத்தீர்ப்பால் ெதாழில்நுட்பக் கல்விக்கான தமிழக அரசின் 1984-1990, 1995-2000 காலப்பகுதிகளின் ஒதுக்கீடுகள் ஓய்ந்து போயின.
தில்லியின் அயலுறவுத் துறையின் ஒதுக்கீடுகள் மட்டும் ெதாடர்கின்றன. மிகச் சிலரான எண்ணிக்ைகயில் ஈழத்து மாணவர் ெதாழில் நுட்பக் கல்விக்குத் ேதர்வாகின்றனர்.
அனைத்துப் பள்ளிகளிலும் தகுதிக்ேகற்பச் சேர்வதில் ஈழத்து மாணவருக்குத் தைடயில்லை.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஈழத்து மாணவர் சேர்க்ைகக்குப் பாதிப்பில்லை.
வசதி பைடத்த ஈழத்து மாணவர் தனியார் மருத்துவ, பல்மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் சேரத் தைடயில்லை.
தமிழக அரசு வழங்கிய ஈழத்து மாணவருக்கான (பொறியியல் 45, மருத்துவம் 20, வேளாண் 10, சட்டம் 5, கால்நைட1, ெதாழில் நுட்பப் பயிலகங்களில் 30 இடங்கள்) ஒதுக்கீடுகளுக்குத் தைட.
மருத்துவப் பட்டமேற்படிப்புச் சேர்க்ைகக்கு நடுவண் அரசு ஈழத்து மாணவருக்கு ஒதுக்கீடு தருவதில்லை.
ஈழத்தமிழரின் எழுத்தறிவு 99.5%. கல்வியே அவர்களது கண். கல்விக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அளவற்றன. ஈழத்தமிழர் பகுதிகளில் கல்விக் கூடங்களின் எண்ணிக்ைக ஏராளம். ஏதிலிகளாக வந்தவர்களைத் தமிழகம் தாங்கி அரவைணத்துக் கல்வியைத் ெதாடர அளிக்கும் ஆதரவுக்கு ஈழத்தமிழர் நன்றிக் கடனுைடயர்.
ஏதிலியராக வந்ததால் பெற்ற ஒதுக்கீடுகளைத் தமிழக அரசு சட்டமாக்கி, ஈழத்தமிழர் என்றென்றும் தமிழகத்தில் கல்விக்கு உரித்துைடயர் என்பைத உறுதி செய்தால், தமிழக ஈழக் கல்வித் ெதாடர்புகள் மேலும் ெநருக்கமாகும். பாடத்திட்டங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மீண்டும் வரும். ஹென்ஸ்மன், வேற்பிள்ளை கனசுந்தரம் போன்றோர் வருவர். ெகாண்டும் ெகாடுத்தும் கல்வியில் ஒருவரை ஒருவர் ஆட்ெகாள்வோம்.

Tuesday, August 01, 2006

Rajaji and Eelam

From: Swarajya, April 1961
THE CEYLON STRUGGLE, By C. RAJAGOPALACHARI
The Ceylon Tamils (who are old Ceylonese and are as attached to their mother island as any other citizens of Ceylon) are asking for a federal form of government in which the Tamil speaking population of North and East Ceylon may have autonomy subject to the Federal Government of all Ceylon. This will enable them to take pride in Ceylon nationality, without any bar-sinister of inferiority.
The language issue is merely an outer symbol of the competition between the two nationalities. It is a battle between communities, not at a battle of cultures or languages. Neither culture nor language is in danger. Either can stand on its own strength and is not capable of being extinguished or even hurt in a substantial degree. The question is whether the Tamil-speaking people are to be treated as equals or not. Equality will be ensured under a federal regime. The unitary Government is necessarily leading up to place them on an inferior level. This is the more unjust because the progress so far achieved and the present status of Ceylon as a whole depended not a little on the patriotic services of the eminent Tamilians of Ceylon. The refusal to grant equal status on a federal basis to the Tamil population amounts to ingratitude.
Let not the Tamil Northern and Eastern Ceylon population be confounded by superficial readers of news in India with the people of South Indian origin who have migrated to Ceylon when the plantations needed hard labour and who have settled down in and around the plantations as permanent but yet unrecognised citizens of Ceylon. They are an entirely different group. Their quarrel is a different one.
Any sympathy from South India extended to the original Tamil speaking people of Ceylon, who are fighting a tremendous battle for autonomy within a federal regime, can be easily mistaken for a Tamil conspiracy to bring Ceylon sovereignty and its integrity into jeopardy. That is the reason why South Indian leaders have been patient and have not given too swift expression to their feelings of sympathy with those who fight a just battle in Ceylon on the language and federalist issues. The present Ceylon Government party has been for sometime past pretending to see a great conspiracy between South Indian Tamils and Ceylon Tamils, which of course is mere myth born of an inferiority complex.
The question of direct action and the advisability of continuing it is quite a different question and should be judged entirely by the leaders of the movement. One who is at a distance and who is a votary of peace may be inclined to advise compromise if it could be had on honourable terms. It is hard to believe that reason will not ultimately prevail. We all hope in India, who have seen the lady-Premier of Ceylon, that she will bring her best emotions into play and succeed in controlling the extreme elements on the Sinhalese or Buddhist side (what ever name we may give it) and bring the protest movement to a suspension on honourable terms.

Tamil Eelam

This note was prepared for the participants
at a consultative meeting on Sri Lanka
on 1st August 2006 at Chennai
by Maravanpulavu K. Sachithananthan,
65, Pantheon Road,
Chennai 600008
email: tamilnool@rediff.com
Sri Lanka – Tamil Eelam

area – around 66,000 sq. km. area;
(40,000 sq. km. Sinhala homeland, 26,000 sq. km. Tamil homeland – 1948 situation).
population – just crossed the mark of 2 crore persons, (estimates, 2006), (74% Sinhala speaking, 25.2% Tamil speaking and 0.8% others - 1981 census, proper census of population not held thereafter).

Looking back……A. D. 1505 to 1947

1505 - Portuguese arrived in the island - which had 3 kingdoms, viz.: Upcountry Sinhala Kandyan, Low country Sinhala Kotte and the Tamil Kingdom stretching from Waikkaal Aru above Negombo in the northwest to Kumbukkan Aru in the southeast.
1505 – Portuguese conquest of the Kotte Sinhala Kingdom.
1619 – Portuguese conquest of the Tamil Kingdom
1656 – Dutch conquest of the Kotte Sinhala Kingdom
1658 - Dutch conquest of the Tamil Kingdom.
1796 – British took over the 2 Kingdoms, ruled them separately through the East India Company Governor from Madras (Chennai).
1803 - Ceylon became a British colony with its own Governor in Colombo.
1805 – British occupation of Tamil Wanni (chieften Pandara Wanniayan)
1815 – British occupation of the Kandyan Sinhala Kingdom.
1823 – Tamil labourers for the hill country plantations started arriving from Tamil Nadu.
1833 – Colebrooke reforms, unifying the 3 different administrative systems into one: seeds sown for a UNITARY political cum administrative structure.
1883 – Anti-Christian uprising by the Buddhist bikkus at Kotahena, Colombo.
1888 – Anti-colonial revolt in Kandy.
1909 – Tamil Association convened in Jaffna by James Hensman (who taught English to Silver tounged Srinivasa Sastri at Kumbakonam) sought independence for the Tamils from the British.
1915 – Sinhala – Muslim riots.
1917 – Arrival of labour for the Colombo harbour from Kerala.
1919 - Founded the Ceylon National Congress with Arunachalam as president.
1921 – Manning reforms
1921 – Arunachalam resigned from the CNC in the wake of Sinhala extremism within the CNC, to form the Ceylon Tamil League.
1924 – Jaffna Youth Congress convened.
1925 – Kandyan national forum – S. W. R. D. Bandaranaike sought a federal form of government with 3 states: Kandyan state, Tamil state and the Kotte state – the pre 1833 status of political cum administrative structure.
1925 – June 28th: Mahendra Pact between Tamils and Sinhalese; subsequently abrogated unilaterally by the Sinhalese yielding to Sinhala extremism.
1931 – Tamil Mahajana Saba convened.
1931 – Donoughmore reforms. UNITARY constitution promulgated. Universal franchise introduced.
1931 – Elections to the state council – Jaffna Youth Congress boycott.
1936 – Second elections to the state council.
1937 – Sinhala Maha Saba convened by S. W. R. D. Bandaranaike.
1939 – A. K. Gopalan visited Colombo to contain the anti-Malayalee wave; the visit was a failure; his May 1st meeting at Colombo was disrupted by Sinhala extremists. Malayalees returned to Kerala in batches.
1939 – Legislations enacted (a) to prevent plantation Tamil workers from acquiring lands in the Sinhala homeland; (b) to prevent plantation Tamils from state employment; (c) to deport a batch of plantation Tamils to India; (d) to prevent further arrival of labourers from Tamil Nadu.
1939 – Jawaharlal Nehru visited Colombo to contain this anti-Indian wave, convened the Ceylon Indian Congress; July 26th public meeting where Jawaharlal Nehru spoke at the Galle Face Green was disrupted by Sinhala extremists.
1944 – All Ceylon Tamil Congress convened by G. G. Ponnambalam.
1944 – Soulbury Commission sittings.
1944 - Sinhala and Tamil to be the official languages – state council legislation discussed.
1947 – Soulbury (UNITARY) constitution promulgated. Section 29 provided safeguards for the minorities.

Looking back…… A. D. 1948 to 1977

1948 – February 4th; British handed over power to the Sinhalese majority parliament; dominion status (independence) granted to Ceylon by the British crown.
1948 – December Ceylon Citizenship Act - deprived nearly a million plantation Tamils, their citizenship. Non-violent protesters led by S. Thondaman beaten up by Sinhala hoodlums, an example of state sponsored terrorism.
1948 – December: Federal Party was convened by S. J. V. Chelvanayagam. Policy: Two linguistic states, one for the Tamils in their traditional homeland; another for the Sinhalese in their traditional homeland; a federal government at the centre, (citing Swiss model) as the minimum arrangement under which Tamils will agree to be part of a unified Ceylon. If the Sinhalese will not agree, the Tamils will opt to form their sovereign state, resurrecting what was lost to the Portuguese in 1619.
1949 – Indian and Pakistani (Residents) Citizenship Act confirmed the previous position with regard to the citizenship of the plantation Tamils.
1948 – 1952 State sponsored colonization by the Sinhalese of the most fertile portions of the traditional Tamil homeland in the north-east, imposing demographic changes favourable to the Sinhalese.
1954 – Prime Minister Kotalawela announced at a public function in Jaffna to make Sinhala and Tamil official languages; later he withdrew his statement at his Kelaniya (UNP) convention yielding to Sinhala extremism.
1956 – Tamils elected Federal Party as their principal political voice in the General election.
1956 – Sinhalese only Act. Sinhalese became the official language. Non-violent protesters led by all the Tamil leaders beaten up by the Sinhala hoodlums, an example of state sponsored terrorism.
1957 – Bandaranaike - Chelvanayagam pact provided for Regional Councils. Unilaterally abrogated by Prime Minister Bandaranaike yielding to Sinhala extremism.
1958 – Mayhem with genocidal intent; an example of state sponsored terrorism; Tamils anywhere attacked mercilessly, their properties looted, their business houses burnt, many thousands killed, injured and internally displaced. India provided ships to transport Tamils to safety.
1960 - Tamils elected Federal Party as their principal political voice in the General election.
1961 - Sinhalese army plagued non-violent sathyagrahis in Jaffna; an example of state sponsored terrorism. Tamil leaders placed under house arrest. Tamils had the taste of an invading army for the first time since 1619. Entire Tamil homeland had never witnessed any army presence or action during the British occupation (except 1. to subdue the defiant Pandara Vannyan during early part of the nineteenth century; 2. a British left over base in Trincomalee, and 3. second world war years).
1964 – S.J.V. Chelvanayagam led a massive non-violent pada yathra across the Tamil homeland to demonstrate the unwillingness of the Tamils to accept Sinhala over lordship.
1964 – Srimavo – Sasthri pact led to in the deportation of about 400,000 plantation Tamils to India.
1965 - Tamils elected Federal Party as their principal political voice in the General election.
1965 – Dudley – Chelvanayagam pact provided for district councils. . Unilaterally abrogated by Prime Minister Dudly Senanaike yielding to Sinhala extremism.
1970 - Tamils elected Federal Party as their principal political voice in the General election.
1971 – Standardization of marks obtained at competitive examinations for entry to professional courses at University level favouring Sinhala students. The cream among the Tamil literate resorted to violent means of meeting the situation; that was the budding of today’s active militancy.
1972 – Brirtish Dominion Ceylon became the Republic of Sri Lanka through an illegal assertion and transfer of power; Tamils boycotted the constituent assembly proceedings; burnt a copy of the 1972 constitution; S. J. V. Chelvanayagam resigned his seat in the parliament, threw a challenge to the government to defeat him in a by-election; in 1975, S. J. V. Chelvanayagam won the by-election defeating the government’s candidate who lost his deposit; the electorate gave a verdict with a paradigm shift from federalism to the establishment of an independent sovereign state of Tamil Eelam.
1974 – 1976: Kachativu agreement gave unbridled power to the trigger happy Sinhala naval force to gun down many hundreds of Tamil fisher folk from Tamil Nadu in the Palk Bay and Gulf of Mannar.
1974 – Government banned the organizing of the 4th International Conference Seminar on Tamil Studies in Jaffna; defiant Tamil academics and organizers went ahead and conducted the academic sessions; Sinhala police opened fire to kill 9 innocent Tamils on the last day of the meet; an example of state sponsored terrorism.
1976 – S. J. V. Chelvanayagam, G. G. Ponnambalam and S. Thondaman teamed up to form a pan-Tamil coalition named Tamil United Front; resolved at its first session at Vaddukkoddai to work for the creation of a sovereign, independent democratic, socialist, secular republic of Tamil Eelam.
1977 – Tamil United Front, renamed Tamil United Liberation Front contested all the parliamentary seats in the traditional homeland of the Tamils; sought and received the mandate from the electorate by winning almost all the parliamentary constituencies with massive lead votes to proceed towards the implementation of the Vaddukoddai resolution, viz., to work for the creation of a sovereign, independent democratic, socialist, secular republic of Tamil Eelam.

Thursday, June 01, 2006

அகதிகளுக்குப் பாதுகாப்பு ஓடை

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
`பனையிலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த' கதையாக ஈழத் தமிழ் அகதிகளின் சோக வரலாறு தொடர்கிறது. மன்னாரிலிருந்து புறப்பட்ட படகைக் கடுங்காற்று கவிழ்க்க, ஐந்து அகதிகள் கடலுள் கரைந்தனர் என்ற செய்தி வந்த ஒரு வாரத்தின் பின்னர், பயணிகளற்ற மன்னார்ப் படகு ஒன்று பாம்பனில் கரைசேர்ந்ததாகச் செய்தியும் வந்து, கொதி ஈயத்தைக் காதில் பாய்ச்சியது.
பஞ்சம், பட்டினியிலிருந்து விடுபடப் பொருளாதார அகதிகளாக எல்லை தாண்டி அசாம், திரிபுரா, மராட்டியம், தில்லி போன்ற இடங்களுக்குக் குடிபெயரும் வங்காள தேசத்தவரின் நோக்கமும் எண்ணிக்கை அளவும் கொண்டவர்களல்ல ஈழத் தமிழகதிகள்.
ஈழத்தில், தத்தம் ஊர்களில் இனிமேல் உயிருடன் வாழமுடியாது எனக் கருதி, இடம்பெயர்கின்றவர்களின் எண்ணிக்கையில் மிக மிகச் சிறுபான்மையினரே தமிழகத்தை நாடுகின்றனர். அவர்களுள் பலர், அன்றாடம் காய்ச்சிகள், வறுமைக் கோட்டின் கீழுள்ளோர்.
ஈழத்தின் மேற்குக் கரையோரத் தீவான மன்னாருக்கும் தமிழகத்தின் கிழக்குக் கரையோரத் தீவான பாம்பனுக்கும் 31 கிமீ. தூரக் கடலே இடைவெளி. இந்தக் கடலில் 20 கிமீ. இலங்கைக் கடல் எல்லைக்குள்; 11 கிமீ. இந்தியக் கடலெல்லைக்குள்.
மன்னார்த் தீவு முழுக்க முழுக்க இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி. அங்கே பேசாலை என்ற மீனவர் குடியிருப்பு. அங்குள்ள மீனவருக்கு மன்னார் - பாம்பன் கடலின் ஒவ்வொரு அங்குலமும் மனப்பாடமாகத் தெரியும். நகரும் மணல் மேடுகளான சேதுத் திடல்களின் காலவோட்ட நகர்வுகளும் தெரியும்.
தமிழகத்துக்கு அகதியாக வர விழைவோர் பேசாலை மீனவரின் துணையை நாடுவது வியப்பல்ல. தலைமன்னாரில் இலங்கைக் கடற்படைத் தளம், மண்டபத்தில் இந்தியக் கடலோரக் காவற்படையினர். இவர்களின் கண்காணிப்பை மீறிக் களவாகப் பேசாலையில் அகதிகளை ஏற்றவேண்டும், பாம்பன் தீவுக்கு அருகே இறக்கவேண்டும், படகுடன் பேசாலைக்குத் திரும்பவேண்டும். இந்தப் பணியை மனிதாபிமான அடிப்படையில் பேசாலை மீனவர்கள் செய்கின்றனர்.
காற்று மெல்ல வீசுகிறதே, புறப்படலாம் எனப் படகைப் பேசாலைக் கடலுள் இறக்குவார்கள், நடுக் கடலுக்கு வந்தபின், திடீரெனக் காற்றுப் பலமாக வீசத் தொடங்கும். தலைக்குமேல் நீர்வாரி இறைக்கும் அலைகள் படகைப் புரட்டும், சிலசமயம் படகு கவிழும். மீனவர் தம் படகையும் உயிரையும் பயணிகளுடன் சேர்ந்து இழப்பர்.
மனிதக் குவியல்களுடன் மீனவர் படகா? இலங்கைக் கடற்படையின் கழுகுக் கண்களுள் விழுந்தால் போதும், கடற்படைப் படகு நெருங்கும், பேசாலை மீகாமனும் படைவீரரும் சிங்களத்தில் பேசுவர், பேரம் சரிவரின் பணம் கைமாறும், பயணிகள் தப்புவர். பேரம் சரிவராவிடின் படகும் பயணிகளும் கைதாவர். தலைமன்னாருக்குப் போய் சிறைகளில் வாழ்க்கை. இழப்பு மீனவருக்கே!
இந்தியக் கடலெல்லைக்குள் கடலோரக் காவற்படையின் ரேடார் வலைக்குள் அகப்பட்டால் போதும், ஹெலிகொப்டர் வானில் தெரியும், படகையும் பயணிகளையும் பாம்பனுக்கு நெருக்கி அணைப்பர். தமிழகக் காவல்துறை படகைக் கைப்பற்றும், பேசாலை மீனவர் சிறையில், பயணிகள் அகதி முகாமில்!
இலங்கைத் தீவோ கொதிக்கும் கொப்பறை. சேதுக் கடலும் தமிழகக் கடலோரமும் எரியும் நெருப்பாகலாமா? போரில் கொடுமையைத் தாண்டி உயிர் தப்பினோம் என்ற பெருமூச்சு வரமுன்பே தமிழகக் கடலெ்லைக்குள் மீண்டும் கொடுமைகளா? கொதிக்கும் கொப்பறைக்குள் இருந்து தப்பி எரிதழலுள் விழுவதா?
இந்தியக் கடலெல்லைக்குள்ளே, அகதியாக வருவோருக்கும், கொண்டு வரும் படகுகளுக்கும் ஏற்படும் துன்பங்களைப் போக்கவேண்டய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு உண்டு.
பாம்பன் தீவின் கிழக்கு முனையில் இருந்து 11 கிமீ. வரை இந்திய எல்லை. இந்த எல்லைக்குள், முதலாம் திடல் (தீடை), இரண்டாம் திடல் மூன்றாம் திடல் எனப் பெயர்கொண்ட நகரும் திட்டுகள், வாடைக் காலத்தில் நீர்மட்டத்தின் கீழ் மறைந்து, கோடையில் தெளிந்த நீரில் சிறு பரப்புகளாகித் தொடரும் இந்தத் திடல்களருகே, முழங்காலளவு ஆழநீரில் அகதிகளை இறக்கியபின் பேசாலைப் படகுகள் விரைந்து மறைந்துவிடும்.
தமிழக மீனவர்களோ, இந்திய கடலோரக் காவற்படையோ கண்டு மீட்கும்வரை இவ்வகதிகள் அத்திடல்களில் காத்திருப்பர்.
சேதுத் திடல்களுக்கு வடக்கே, தனுஷ்கோடிப் பழைய இறங்குதுைறையிலிருந்து 15 கிமீ. நீளும் இந்திய எல்லைக்குள், பாதுகாப்பு ஓடை அமைத்து, பேசாலையிருந்து வரும் அகதிகளுக்கும் படகுகளுக்கும் நம்பிக்கையையக் கொடுக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு உண்டு. இரண்டு அல்லது மூன்று கடலோரக் காவற்படைப் கப்பல்கள் 24 மணிநேரமும் இந்தப் பாதுகாப்பு ஓடைக்கு அரணாக நின்றால், உண்மையான அகதிகள் தஞ்சமென வருகையில் நெஞ்சம் குளிர்வர்.
அகதிகளைக் கொண்டுவரும் படகுகளைக் கைப்பற்றி, மீகாமான்களைச் சிறையில் அடைப்பது கொடுமை. மனிதாபிமான நோக்குடன் குறைந்த செலவில் நிறைந்த இழப்புகளுக்குத் தம்மை ஆளாக்குவோருக்கு மனிதாபிமானம் தரும் பரிசு இதுவா?
பிரசவத்துக்கு இலவசமாகப் போகும் ஆட்டோ, விபத்தில் காயமுற்றவறை ஏற்றிவரும் கார், நடுக் கடலில் எந்திரம் பழுதடைந்த படகை இழுத்துவரும் சக மீனவரின் படகு, இப்படி எத்தனையோ எடுத்துக் காட்டுகள். இவர்களைப் போன்றவரே பேசாலை மீனவர்; ஆபத்துக்கு உதவப்போய் ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார்களே!
24 மணிநேரப் பாதுகாப்பு ஓடை அமைத்து உண்மை அகதிகளுக்குத் தஞ்சமளிப்பதும் பேசாலை மீனவரின் படகுகளைக் கைப்பற்றாமல் திருப்பி அனுப்புவதும் இந்திய அரசின் தார்மீகக் கடமைகள்.

Tuesday, May 02, 2006

எத்தர், பித்தர், போலிக் கொள்கையர்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கபிலவஸ்துவில் போர்:
ஆற்றின் ஒரு கரையில் தன் தந்தையின் வழிவந்தவரின் அரசு. மறுகரையில் தன் தாயின் வழிவந்தவரின் அரசு. ஒரே மரபில் வந்த உறவுக்கார அரசர்கள்.
ஆற்றுநீரைப் பங்கிடுவதில் சிக்கல். இரு கரைகளிலும் உள்ள அரசுகள் போருக்குத் தயாராகின்றன. கபிலவஸ்துவில் போர். செவியுற்ற புத்தர் சேதவனத்திலிருந்து புறப்பட்டுக் கபிலவஸ்து சென்றார். போருக்குத் தயார் நிலையின் இருந்த இரு அரசர்களையும் அழைத்தார்.
பூமியின் மேடே அணைக்கரை. அந்த அணைக்கரையை விட மனிதர்களின் இரத்தம் குறைந்த மதிப்புள்ளதா? பயனற்ற ஒன்றிற்காக விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பலியிடப் போகிறீர்களா?
புத்தர் அந்த இரு அரசர்களிடமும் வினவினார். சிந்தனைத் தெளிவுபெற்ற அரசர்கள் போரைக் கைவிட்டனர். அமைதி உடன்பாட்டுக்கு வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் போர்:
வட இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் அரசின் பெயர் நாக நாட்டு அரசு. அங்கே, ஒரே வழியில் வந்த தமிழ் மன்னர் இருவர்; மாமனும் மருகனும் ஆனவர்.
முன்னோர் விட்டுச் சென்ற மாணிக்கக் கற்களால் ஆன அரியணை உனக்கா, எனக்கா என மன்னர் இருவரும் ஒருவரோடு ஒருவர் போரிடப் படை திரட்டுகின்றனர். செவியுற்ற புத்தர் சேதவனத்திலிருந்து புறப்படுகிறார். யாழ்ப்பாணக் குடாநாட்டை அடைகிறார்.
மனித உயிர்களை விட மாணிக்கக் கற்கள் விலைமதிப்புடையனவா? உயிர்கள் பெரிதா? அரியணை பெரிதா? அரியணையை எனக்குரியது. போரைக் கைவிடுங்கள்.
புத்தரின் புனித வேண்டுகோளை ஏற்றுத் தமிழ் மன்னர் போரைக் கைவிடுகின்றனர். புத்தரின் புனித போதனைகளைக் கேட்டுப் புத்தக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்குகின்றனர்.
கீழ்நில மருங்கின் நாகநாடாளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி, எமதீதென்றே எடுக்கல் ஆற்றோர், தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார், செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமர் புரிநாள், இருஞ்செரு ஒழிமின் எமதீது என்றே பெருந்தவ முனிவன் இருந்தறம் உரைக்கும் (மணிமேகலை 8: 54-61) மணிமேகலையின் பின் எழுதப்பெற்ற மகாவமிசத்திலும் (1: 44-70) இந்தச் செய்தி உண்டு.
போலிப் புத்தர்கள்:
போரகள் இரண்டினைத் தவிர்ப்பதற்காகப் புத்தர் பயணித்த வரலாறுகள் பதிவில் உள. பதிவாகாதன பல. போரை விரும்பாதவர் புத்தர். அன்பைப் போதித்தவர் புத்தர். மனித நாகரிக வளர்ச்சியின் அடிப்படையே அன்பும் புரிந்துணர்வும் எனப் போதித்த, புத்தரின் போதனைகளைக் கடைப்பிடிக்கிறோம், புத்த சாசனத்தைக் காக்கும் அரசே எமது அரசு எனக் கொழும்பு அரசு உரத்துக் கூறுகிறது.
அன்பைப் பெருக்கவும் அறத்தை வளர்க்கவும் வெறுப்பைப் போக்கவும் கருணையைக் காக்கவும் அரசியமைப்பிலேயே புத்த மதத்துக்குப் பாதுகாப்பு வழங்கிய கொழும்பு அரசு, கடந்த 50 (1956-2005) ஆண்டுகளாக அரச படைகளை ஏவித் தமிழரைக் கொன்று குவிக்கிறது, கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.
கொள்கைப் போலியரான சிங்களவருக்குப் புத்தரின் போதனைகளில் நாட்டமில்லை. போர்களைத் தவிர்த்து மனித உயிர்களைக் காத்த புத்தரின் வழி நிற்கிறோம் எனக்கூறி, புத்த சாசனத்துக்கு முன்னுரிமை எனக் கூறி, புத்தரின் போதனைகள் என்ற போர்வைக்குள் போர் முரசுகளை மறைத்து வைத்திருக்கும் மனிதப் போலிகளே சிங்களவர்.
ரஷ்யப் புரட்சி:
அடிமைக்கும் ஆண்டானுக்கும் இடையே இணக்கம் என்றும் ஏற்படாது. ஒடுக்குபவனும் ஒடுங்குபவனும் ஒரே அணியில் இருக்க முடியாது. விடுதலையும் சமத்துவமும் இருந்தால் மட்டுமே, இனங்களைத் தாண்டிய சமத்துவம் சாத்தியம்.
தேசிய மட்டத்தில் முதலாளித்துவத்துக்கு எதிராகப் பாட்டாளிகள் போரிடுவது முதல் கட்டம். இடைக்காலமான இந்த நிலைக்குப் பின்னர், அனைத்துலக மட்டத்தில் இப்போராட்டம் விரிந்து பரந்து கலந்துவிடுமென மார்க்சு நம்பினார். முன்னுதாரணங்களற்ற கொள்கைகளை மார்க்ஸ் விட்டுச் சென்றார்.
1917இல் ஆகாவென எழுந்த ரஷ்யப் புரட்சியின் அடிப்படைகளான, அமைதி, நிலம், உணவு ஆகிய முப்பெரும் முழக்கங்களுக்கு, தேசிய இன சமத்துவம், பிரிந்து செல்லும் உரிமை தளங்களாயின. புரட்சியின் வெற்றிக்குப் பின், லிதுவேனியா, எஸ்தோனியா போன்ற பகுதிகள் பிரிந்தன, தனி அரசுகளாக மலர்ந்தன. பொதுவுடைமையை முன்னெடுத்த லெனின், வரலாற்று முன்னுதாரணங்களை விட்டுச் சென்றார்.
இலங்கையின் பொதுவுடைமைக் கருத்தாளருக்கு சோவியத் யூனியன், சீனா, யூகோஸ்லாவியா, கியூபா முன்னுதாரங்களாயின. லெனினும் டிராக்சியும் மாவோவும் சேகுவாராவும் வழிபாட்டுக்குரியவராயினர்.
காய்த்துப் பழமாகவேண்டும் என்பது மார்க்சின் கருத்து; காய்க்காமலே பழுத்த பழம் கிடைக்கும் என இலங்கைப் பொதுவுடைமையாளர் கருதினர்.
போலிப் பொதுவுடைமை:
1949இன் குடியுரிமைச் சட்டம் பொதுவுடைமைவாதிகளுக்கெதிரான சிங்கள நிலவுடைமையாளரின் சதி. பத்து இலட்சம் மலையகத் தமிழர் இச்சதிக்குப் பலிக்கடா.
1952இன் அரசுசார் குடியேற்றத் திட்டங்கள் தமிழர் தாயகக் கோட்பாட்டை உடைத்துத் தமிழர் நிலங்களைச் சிங்களமயமாக்கின.
1956இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியெனப் பண்டாரநாயக்கா சட்டமாக்கிய விவாதத்தில், இரு மொழிகள் ஒரு நாடு, ஒரு மொழியெனில் இரு நாடுகள் எனப் பொதுவுடைமையாளரான கொல்வின் ஆர். த சில்வா கூறினார். பொதுவுடைமைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறிச் சிங்களம் ஆட்சி மொழியாகியது.
இனவெறியாளரான சிங்களவரிடையே பொதுவுடைமைக் கருத்துகள் முற்றாக எடுபடவில்லை.
பொதுவுடைமைச் சிந்தனைக்குள் மூழ்கி எழுந்த பிலிப்பு குணவர்த்தனர், நிலவுடைமைப் பண்டாரநாயக்காவுடன் கூட்டுச் சேர்ந்து தமிழரின் மொழியுரிமையைப் பறித்தார். தமிழரின் தாயகக் கோட்பாட்டுக்கு எதிராளியாய், 1957இன் பண்டாரநாயக்கர் - செல்வநாயகம் ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தார்.
சிங்கள நிலவுடைமைக் குடும்ப ஆதிக்க நிலைகளுள், பண்டாரநாயக்கர் குடும்பத்தவரைப் பொதுவுடைமைக் கட்சிகள் சார்ந்திருந்தன. சேனநாயக்கர் - செயவர்த்தனர் குடும்பங்களை முதலாளித்துவக் குடும்பங்களாகக் கருதி எதிர்த்தனர்.
பிலிப்பு குணவர்த்தனரைத் தொடர்ந்து, 1971இல் பீட்டர் கெனமன், என். எம். பெரைரா, கொல்வின் ஆர். த சில்வா யாவரும் சிறீமாவோ பண்டாரநாயக்கருடன் சங்கமித்தனர். சிங்களமே ஆட்சி மொழி, புத்தமே முன்னுரிமை மதம் என்ற வரிகளுடன் அமைந்த அரசியலமைப்பினை 1972இல் எழுதி வடிவமைத்தவர் இரு மொழிகள் ஒரு நாடு, ஒரு மொழியெனில் இரு நாடுகள் என 1956இல் கூறிய பொதுவுடைமைக் கட்சியாளர் கொல்வின் ஆர். த சில்வா.
ஒடுக்குமுறைக்கு எதிரான சிந்தனையோட்டத்துடன் பொதுவுடைமைக் கட்சிகளில் இருந்த சிங்களவர், ஒடுக்குமுறையின் கருவிகளாயினர்.
1971இல் ஆயுதப் புரட்சியை முன்னெடுத்த, சோவியத், வடகொரியப் பின்னணி கொண்ட, சேகுவாராக்கள் எனத் தம்மை அழைத்த, உரோகண விசயவீரர் தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (மவிமு), தமிழரின் மொழி, தாயக, வாழ்வுரிமைகளை முற்றாக மறுத்தது.
பீட்டர் கெனமன், என். எம் பெரைரா, கொல்வின் ஆர். த சில்வா பங்குபற்றிய சிறீமாவோவின் அரசு, உரோகண விசய வீரரின் பொதுவுடைமைப் புரட்சியாளர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையினரை 1971 சித்திரையில் படையனுப்பிச் சுட்டு, சடலங்களை ஆறுகளில் தள்ளிவிட்டது.
அக்காலத்துக்குப் பின்னர், வாசுதேவ நாணயக்காரர், பத்தேகமத் தேரர் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய பொதுவுடைமையாளர் சிலர், தமிழத் தேசியம் - தன்னுரிமை போன்றவற்றுக்குக் குரல் கொடுத்தனர்.
கொள்கைப் போலியர்:
மார்க்சின் கொள்கைகளோ, லெனினின் முன்னுதாரணங்களோ சிங்களப் பொதுவுடைமையாளருக்கு உதவவில்லை.
புத்தரின் பெயரைப் போர் தொடுக்கப் பயன்படுத்துபவரே, பொதுவுடைமைப் போர்வையில் தமிழ்த் தேசியத்தையும் தன்னுரிமையையும் ஒடுக்குகின்றனர்.
பண்டாரநாயக்கருக்குப் பிலிப்பர் போல, சிறீமாவோவுக்குக் கொல்வின் போல, சந்திரிகாவுக்கும் இராசபக்சாவுக்கும் மவிமுவின் சோமவம்சர் அமரசிங்கரும் விமல் வீரவம்சரும் இருக்கின்றனர்.
நிலவுடைமைக் குடும்பங்களின் புத்த சிங்கள இன வெறிக்குத் துணைபோபவர் போலிப் பொதுவுடைமையாளர் என்பதை இந்தியப் பொதுவுடைமையாளர் கண்டறிந்த நிகழ்ச்சி சுவையானது.
மக்கள் விடுதளை முன்னணி(மவிமு)யின் மாநாடு; உலகின் பல பாகங்களிலுமுள்ள பொதுவுடைமைக் கட்சியாளருக்கு அழைப்பு; இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக தில்லியிலிருந்து ஒருவர் போகிறார். நிகழ்த்தவுள்ள உரையைத் தயாரித்து எடுத்துச் செல்கிறார். மவிமு தலைவர்களுக்குக் காட்டுகிறார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை பற்றிய குறிப்புகள் அவ்வுரையில் இருந்தன. அவற்றை நீக்கிப் பேசுமாறு மவிமு கேட்கிறது. அவர் மறுக்கிறார். உரை நிகழ்த்தாமலே திரும்பினார் எனக் கூறுவர்.
இதற்குப்பின் இலங்கை நிலைமை குறித்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் நிலை கூர்மையடைகிறது. இலங்கையுடன் பாதுகாப்பு உடன்பாடு எதையும் செய்யக் கூடாதென்ற இந்திய பொதுவுடைமைக் கட்சியின் நிலையைப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்திக் கூறுகின்றனர்.
மவிமுவைப் பொதுவுடைமை சார்ந்த அமைப்பாகக் கருதுவதை இந்திய பொதுவுடைமைக் கட்சி கைவிட்டுவிட்டது போலும்?
மகிந்தரின் சிந்தனை:
இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மகிந்தரின் சிந்தனையை வெளியிட்ட மகிந்தர் இராசபக்சா, மவிமு மற்றும் பிக்கு முன்னணியின் கைப்பாவையாகி, சந்திரிகாவின் கருத்தையும் மீறி, தமிழரின் தாயகக் கோட்பாடு, தமிழரின் தன்னுரிமை, தமிழருடன் கூட்டாட்சி என்ற நிலைக்குச் சிறிதேனும் இடங்கொடுக்காது, ஒற்றையாட்சிமுறைக்குள்ளே தீர்வு எனச் சிங்கள வாக்களரிடம் ஆணை கேட்டு நூலிழையில் வெற்றியும் பெற்றுள்ளார்.
மகிந்தரின் இப்பிறழ்ச்சிச் சிந்தனைகளைத் தெரிந்து கொண்டே, இலங்கைப் பொதுவுடைமைக் கட்சி, சமசமாசக் கட்சி, நவ சமசமாசக் கட்சி, புதிய மக்களாட்சிக் கட்சி, மக்களாட்சி இடதுசாரி முன்னணி (வாசுதேவர் நாணயக்காரர்) ஆகிய பொதுவுடைமை நோக்கிய கட்சிகள் மகிந்தருக்குத் தேர்தலில் முற்றுமுழுதாக ஆதரவு நல்கின.
மகிந்தரின் வெற்றிக்குப் பின்னர் அமைச்சரவையில் சேர்ந்த, சமசாசக் கட்சியும் இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியும் தெரிவித்து வரும் கருத்துகள் அக்கட்சியினர் பொதுவுடைமைத் தோல் போர்த்த சிங்கள இனவெறியர் என்பதைத் தெளிவாக்கியுள்ளன.
இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரான டி. ஈ. டபிள்யூ. குணசேகரா, மகிந்தரின் அமைச்சரவையில் அரசியமைப்பு விவகார அமைச்சர். தாயகக் கோட்பாடு, தன்னுரிமை என்ற கோரிக்கைகளைத் தமிழர் கைவிட்டு, ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் இணையவேண்டுமென, கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி 11.12 இதழுக்குப் பேட்டியளித்துள்ளார். கடவுள் மறுப்புக் கொள்கையினரான குணசேகரா, புத்த பிக்குகள் மந்திரித்துக் கட்டிய பிரித் நூலை மணிக்கட்டில் கட்டியவாறு பிக்குகளுக்கு முன் மண்டியிட்டு வருகிறார்.
சமசாசக் கட்சியின் தீசர் விதாரணரும் அமைச்சராக உள்ளார். ஒற்றையாட்சிக்குள் போதுமளவு அதிகாரங்களைத் தமிழருக்குப் பகிர்ந்தளிக்க முடியுமென்று தீசர் கூறி வருகிறார்.
சிங்களப் பொதுவுடைமையாளர் எனக் கூறிக்கொள்வோர், 23 பிரிவுகளாகச் சிங்களவரிடையே உளர். இக்கட்சிகளுள் எதுவும் எச்சமின்றிச் சிங்கள மேலாதிக்கத்தை முற்று முழுதாக ஆதரிக்கின்றன. இவர்களைப் பொதுவுடைமையாளர் அகிலம் படிப்படியாகக் கைகழுவி வருகிறது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய அகிலப் பொதுவுடைமையாளருக்கு வழிகாட்டியாக மாறி உள்ளனர்.
புத்தமும் இல்லை, பொதுவுடைமையும் இல்லை; மொழியும் சமயமும் போர்வைகளாக, கொள்கைவெறுமை தலை தூக்க, தாழ்வுளப்பாங்கு மீநிற்க, வரலாற்றுப் பொய்மைகள் உயிர் கொடுக்க, வளர்ச்சியைக் காவு கொடுத்து, வாழ்வாதரங்களை விலை பேசி, கற்பனைக் குதிரைகளைப் பாயவிட்டு, சிங்களவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கும் எத்தர்களும் பித்தர்களுமே தம்மைப் புத்தர் என்றும் பொதுவுடைமையர் என்றும் புரட்டுப் பேசிவருகின்றனர்.
இவர்களின் மடமையால் ஈழத்தமிழரின் வளமான எதிர்காலம் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியதே!

தமிழீழமும் மேலை நாடுகளும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மேலைநாடுகளுக்கு இலங்கையே முதல் பரிசோதனைக் கூடமல்ல. எதியோப்பியா (எறிற்றீரியா), பாலஸ்தீனம், தென்னாபிரிக்கா, கொரியா (வட-தென்), சோவியத் யூனியன் (மத்திய ஆசிய நாடுகள்), யூகோஸ்லாவியா, கொலம்பியா, சூடான் (வட-தென்), இந்தோனீசியா (தைமூர்), சீனா (திபெத், தைவான், ஹொங்கொங், மக்காவோ), ஈராக் (குர்து), சைப்பிரஸ், ஸ்பெயின் (பாஸ்க்கு), இந்தியா (காஷ்மீர், நாகலாந்து, மிசோராம்) போன்ற பல நாடுகளில் ஏதோ ஒரு வகையில் அவர்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலைகளில் அவர்களின் சார்பாக இஸ்கண்டிநேவிய நாடுகளான, நோர்வே, சுவீடன், டென்மார்க்கு, பின்லாந்து ஆகிய நாடுகள், உலக நாடுகளில் அரசியல் சிக்கல்களைத் தீர்க்கும் அமைதி முயற்சிகளை முன்னெடுத்தன. ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகள், இஸ்கண்டிநேவிய நாடுகளுக்குப் பின்னே நின்று வலிவு கொடுத்தன.
அமைதியை நிலைநாட்டுவது ஒரு நோக்கமாக இருந்தாலும்,
-மேலைநாட்டு நுகர்ச்சிப் பொருள்களுக்குச் சந்தையை விரிவாக்கல்,
-வளரும் நாடுகளின் கனிம வளங்களைக் குறைந்த விலையில் பெறுதல்,
-ஆங்கில, பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளை உலக மொழிகளாக்கல்,
-ஆசிய ஆபிரிக்காவைக் கிறித்து மதமயமாக்கல் என்ற போப்பாண்டவரின் பிரகடனங்கள்,
-மேலைநாட்டு மக்களாட்சி முறையை ஏனைய மக்கள் ஏற்குமாறு வலியுறுத்தல்
-அமெரிக்க, பிரித்தானிய, பிரஞ்சுப் படைத்தளங்களை உலகளாவி நிலைகொள்ளச் செய்தல்,
-மேலைநாடுகளின் மறைமுக மேலாதிக்கத்தை ஏனைய நாடுகள் ஏற்குமாறு பார்த்துக் கொளல்,
-மேலை நாடுகளைவிட வேறெவரும் படைபலத்தில் வளராமல் செய்தல்,
-தாம் கண்டுபிடிக்கும் புதிய ஆயுதங்களைச் சோதிக்கும் தளமாக வளரும் நாடுகளைப் பயன்படுத்தல்.
ஆகியனவும் பிறவும் அவர்களின் அடிப்படை நோக்கங்களாக இருந்தன.
இந்த நோக்கங்களை நிறைவேற்ற, பெரிய நாடுகளாயுள்ள அரசுகள் தடையாக இருந்தன. எனவே, பெரிய நாடுகளை உடைத்தோ, பிரித்தோ, சிறிய நாடுகளாக மாற்றுவதே அவர்களது அமைதி நோக்க அணுகு முறைகளுள் ஒன்று.
சோவியத் யூனியன் உடைந்தது. யூகோஸ்லாவியா உடைந்தது. எரிற்றீறியா பிரிந்தது. தைமூர் பிரிந்தது. இஸ்ரேலை ஏற்கும் பாலஸ்தீனம் உருவாகி வருகிறது. சூடானின் கிறித்தவத் தென் பகுதி, தன்னாட்சியை நோக்கிப் போகிறது, ஈராக்கில், சியாக்கள், சன்னிகள், குர்துகள் தனித்தனி அரசுகளை அமைத்து இணைப்பாட்சியை அமைத்துள.
மேலோட்டமாகப் பார்த்தால் தேசிய இனக்குழுக்களுக்கு மேலை நாடுகள் உதவுவது போல் தோன்றும். உண்மை அதுவல்ல.
அமெரிக்காவில் கறுப்பர், மாயா நாகரீகத்தார் (செவ்விந்தியர்), எஸ்கிமோவினர், ஐரோப்பாவில் வட அயர்லாந்தினர், பிளெமிங்கோ மொழியினர், பாஸ்க்குகள், யப்பானின் அயினோ இனத்தவர், ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர், இறியூனியனின் தமிழர் போன்ற தேசியக் குழுக்கள் பலவற்றையும் உட்பிரிவுகளையும் இவர்கள் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதை எவரும் எடுத்துக் கூறுவதில்லை.
கிறித்தவர்களைக் காக்கத் தைமூரைப் பிரித்தவர்கள், இந்துக்களைக் காக்க, பாலியைப் பிரிக்கவில்லை.
மக்களாட்சியைப் பரப்ப விழைபவர்கள், தங்களுக்குச் சாதகமான வலதுசாரிச் சர்வாதிகாரிகளை ஆதரிக்கின்றனர்.
வளரும் நாட்டுக் கனிம வளங்களை அடிமாட்டு விலைக்கு வாங்குபவர்கள், தங்களது அறிவியல் தொழில்நுட்பங்களுக்குப் புலமைச் சொத்துக் காப்பு மூலம் வறிய நாடுகளிடம் பெருந் தொகைகளைக் கேட்பதுடன், வறியநாடுகளின் நெடுநாளைய கண்டுபிடிப்புகளைத் தமதாக்கிப் புலமைச் சொத்துரிமை கொண்டாட முயல்கின்றனர்.
இலங்கையில், வெளியார் தலையீட்டைத் தமிழர் நாடாமல் 35 ஆண்டுகளாகத் (1948-1983) தொடர்ந்து போராடி வந்தனர். 1983இல் சிங்கள இனவெறியின் கோரத் தாண்டவத்தைத் தாளாத தமிழர், ஏதிலிகளாயினர், பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர்.
ஏறத்தாழப் பத்து இலட்சம் தமிழர் வடஅமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய பசிபிக் நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
மேலைநாடுகளின் கவனத்தை இப் புலம்பெயர்ப் படையெடுப்பு ஈர்த்தது. அங்கு போன தமிழரும் வாழாவிருக்கவில்லை. அதன் பெறுபேறாக 1995ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய நாடுகள் இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க நேரடியாக வியூகங்கள் வகுக்கத் தொடங்கின.
முதலில் வந்த பிரித்தானியாவின் முன் மொழிவுகள், சிங்களவரை நோக்கியே அமைந்தன. ஒரு கட்சியினர் முன்மொழிவதை எதிர்க் கட்சியினர் மறுப்பதைக் காரணம் காட்டி, இனச்சிக்கலைத் தீர்க்க, முதலில் சிங்களவரிடையே கருத்தொருமை உருவாக வேண்டும் எனப் பிரித்தானியா சுட்டியது. பொக்ஸ் திட்டம் என அழைக்கப் பெற்ற இத்திட்டம், சிங்களவரின் வெறுப்புக்குள்ளானதால், பிரித்தானியாவைத் தீர்வுக் களத்திலிருந்து கொழும்பு வெளியேற்றியது.
மேலைநாடுகள் சார்பில், 1999இல் நோர்வே அணுகியது. 2000இல் நோர்வேயைச் சந்திரிகாவே அழைத்தார்.
2002 பெப்ருவரி 24இல் கொழும்பும் கிளிநொச்சியும் எழுதி ஏற்ற உடன்பாடு, கொழும்பு அரசின் ஆற்றாமையின் வெளிப்பாடு. இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பகுதிகளைத் தன்வசம் வைத்திருக்க முடியாதென்பதைக் கொழும்பு ஒப்புக்கொண்ட வரலாற்று ஆவணமே அந்த உடன்பாடு.
கொழும்பு இவ்வாறு ஒப்புக் கொண்டதற்கு மேலைநாடுகள் சாட்சியம் கூறின. இந்த ஆவணத்தை உருவாக்குவதிலும் ஒப்பம் பெறுவதிலும் மருத்துவச்சியாக மேலைநாடுகளின் சார்பாக நோர்வே பணிபுரிந்தது.
சிங்கள மேலாதிக்கத்தைப் போக்கி, தமிழரின் ஆதிக்கத்தைத் தமிழர் தாயகத்தில் நிறுவிய திறமையும் பெருமையும் சிறப்பும், பிரபாகரனையும் அவர் தலைமை தாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையுமே சேரும்.
1972இல் தமிழரின் ஒப்புதலின்றி, அரசியலமைப்பைச் சிங்களவர் உருவாக்கினர். அப்பொழுதே தமிழரின் இறைமை தமிழரிடம் வந்து சேர்ந்தது. (படிக்க: மு. திருச்செல்வம் - ஈழத்தமிழர் இறைமை, மணிமேகலைப் பிரசுர வெளியீடு) தமிழரின் இறைமையைத் தன்னாதிக்கமுடைய அரசு மூலம் நடைமுறைப்படுத்தும் நெடும் பயணத்தின் முதற் படியே, 2002 பெப்ருவரியில் எழுதிய சிங்கள-தமிழ் உடன்பாடு.
மேலை நாடுகளின் அடிப்படை நோக்கங்களுள் சிக்காமல், தமிழ்த் தேசியத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வள்ளுவ வழியாளர் (பார்க்க: திருக்குறள், பொருட்பால் - அரசியல்) பிரபாகரனே. இறைமையும் தன்னாதிக்கமும் உடைய மக்களாக, தம் தாயகத்தின் பெரும் பகுதிக்குள் ஈழத்தமிழர் 2002க்குப் பின் வாழ்கின்றனர்.
மேலைநாடுகளின் முயற்சியால் வந்த தீர்வு சிங்களவருக்கு அச்சத்தைத் தர, நோர்வேயையும் மேலைநாடுகளையும் வெளியேற்றச் சிங்களவர் 2005 தேர்தலில் வாக்களித்தனர். இந்தியாவை மீண்டும் உள்ளிழுக்க முயல்கின்றனர்.
சிங்களவர் சார்பாக உலகில் எந்த நாட்டின் எத்தகைய தலையீடு அமைந்தாலும் நீதியும் நியாயமும் தமிழர் பக்கமே அமையும். தமிழ்ப் போராளிகளின் உயிரீகைகள் தமிழ்த் தேசியத்தை வெற்றியுடன் முன்னெடுத்துச் செல்லும். தமிழர் மரபு வழித் தாயகத்தில் (படிக்க: தமிழீழம் நாட்டு எல்லைகள், காந்தளகம் வெளியீடு) தமிழீழம் அமைவதே தீர்வு. இஃதை இன்றே, இப்பொழுதே உலகம் உணர்வதே விரைந்த மனித வளர்ச்சிக்கு வழி.