மக்களாட்சிக்கு ஒரு மணிமகுடமே இந்திய வழிகாட்டல்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இங்கிலாந்தின் முதல் குடிமகனாவது, மிக எளிது. அரசர் வீட்டுப்பிள்ளையாக பிறந்து விடுவதுதான் அங்கு ஒரே ஒரு தகுதி.
நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் முதல் குடிமகனாவது எளிதானதல்ல. இரபத்தெட்டு மொழி வாரி மாகாணங்கள், ஏழு யூனியன் பிரதேசங்கள், இமயமலைத் தொடக்கம் இந்து பெருங்கடல் வரை நீண்டு அகன்ற நிலப்பரப்பு, இஃதே இந்தியா.
இந்தப் பரந்த நிலப்பரப்பில் வாழும் எந்த ஒரு குடிமகனும் சில வரையறைகளை நிறைவு செய்தால் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகலாம். இந்தியாவின் முதல் குடிமகன் ஆகலாம்.
1947 ஆகத்து 15 அன்று இந்தியா விடுதலை பெற்றது. 26 ஜனவரி 1950ல் இந்தியா, குடியரசு ஆனது. அதுவரை ஆளுனர் முதல்வராக இருந்த இருவருள் மவுண்பேட்டன் பிரபு ஒருவர், தமிழரான சேலத்து இராஜகோபாலாச்சாரியார் மற்றவர்.
இந்தியாவின் புதிய அரசியல் யாப்பை உருவாக்கிக் கொண்டிருந்த அரசியல் அமைப்பு நிர்ணய சபைத் தலைவராக இருந்தவர் இராஜேந்திர பிரசாத். 1950 ஜனவரி 26 அன்று புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்து, இந்தியா குடியரசு ஆனதும், அரசியல் அமைப்பு நிர்ணய சபை தலைவராக இருந்த, தகுதிவாய்ந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இராஜேந்திரப் பிரசாத் குடியரசுத் தலைவரானார்.
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் . ஒருவர் எத்தனை பதவிக் காலங்களுக்கும் குடியரசுத் தலைவராக இருக்கலாம். 1955 ஜனவரியில் இராஜேந்திரப் பிரசாத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததும் புதியவர் ஒருவரைக் குடியரசுத் தலைவராக்க அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு விரும்பினார்.ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழு இராஜேந்திரப் பிரசாத் குடியரசுத் தலைவராக நீடிப்பதையே விரும்பியது. எனது கருத்துக்கு கட்சி மதிப்பளிக்கவில்லையே எனப் பிரதமர் நேரு ஆதங்கப்பட்டார்.
இரண்டாவது பதவிக்காலம் முடியும் வரை இராஜேந்திரப் பிரசாத் குடியரசுத் தலைவராகத் தொடர்ந்தார்.
1961ல், அடுத்த குடியருத் தலைவர் யார்? என்ற வினா எழுந்த போது, மூன்றாவது பதவிக் காலமும் இராஜேந்திரப் பிரசாத் நீடிக்கக்கூடும் என அஞ்சிய இராஜ்யசபை உறுப்பினர்கள் சிலர், குடியரசுத் தலைவராக ஒருவர் இரு பதவிக் காலங்களுக்கு மட்டுமே தொடர்ந்து நீடிக்கலாம் என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வர முயன்றனர். காங்கிரஸ் கட்சி இராதாகிருஷ்ணன் பெயரை முன் மொழிந்து, அச்சட்ட முன் மொழிவை மீள்வாங்கச் செய்தது. சட்டம் வேண்டாம் மரபு நிலைக்கட்டும் என்றார் பிரதமர் நேரு.
1962 - 1967 காலப்பகுதியில் தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்து, தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டு, சென்னையை வாழ்விடமாகக் கொண்ட இராதாகிருஷணன் குடியரசுத் தலைவராக இருந்தார். இராதாகிருஷ்ணன் பிரதமர் நேருவின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, சிறந்த தத்துவஞானி. குடியரசுத் துணைத் தலைவராக இரண்டு பதவிக் காலங்களைக் கண்டவர்.
இராதாகிருஷ்ணனுடைய பதவிக் காலம் 1967ல் முடிந்தபொழுது அவருக்கு மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வழங்கக் காங்கிரஸ் கட்சி, காமராஜர் தலைமையில் வற்புறுத்தியது. அப்பொழுது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். காமராஜரின் விதப்புரையை இந்திரா நிராகரித்தார். வங்காளியான சாகீர் உசேன் குடியரசுத் தலைவராகத் தெரிவாக வழிசெய்தார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்த சாகீர் உசேன் குடியரசுத் துணைத் தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்.
1969 மே 3ம் நாள் சாகீர் உசேன் காலமானார். இதை அடுத்து நடந்த நிகழ்வுகள் இந்திய குடியரசுத் தேர்தல் வரலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தன.
காமராஜரும், மொர்ராஜி தேசாயும் இணைந்து சஞ்சீவ ரெட்டியைக் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தினர். பிரதமர் இந்திரா காந்தியே இவரது பெயரை முன் மொழிந்தார். எனினும் சில நாட்களில் தனது மனதை மாற்றினார். அப்பொழுதும் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த வி.பி. கிரி சுயேட்சை வேட்பாளராக விண்ணப்பித்திருந்தார். தேர்தலில் பிரதமர் இந்திரா ஆதரவுடன் ஆந்திரரான கிரி வென்றார் சஞ்சிவிரெட்டி தோற்றார். காங்கிரஸ் கட்சி பிளவுண்டது. இந்திரா காங்கிரஸ் என்ற புதிய கட்சியும் எழுந்தது.
1974 குடியரசுத் தலைவர் தேர்தலில் அசாமைச் சேர்ந்த பக்ருதீன் அலி அகமது இந்திராவின் வேட்பாளராகி வெற்றி பெற்றார். அதுவரை குடியரசுத் துணைத் தலைவராக இருந்த அவர் 1974இல் குடியரசுத் தலைவரானார்.
1977 பிப்ரவரி 11ல் பக்ருதீன் அலி அகமது காலமானார். அப்பொழுது மொர்ராஜி தேசாய் பிரதமராக இருந்தார். சென்னை காலஷேத்திராவின் தலைவி ருக்மணி அருண்டேலை குடியரசுத் தலைவராக்க மொர்ராஜி தேசாய் விரும்பினார். ஆனால், அவரது ஜனதா கட்சியினர் நீலம் சஞ்சீவ ரெட்டியை முன்மொழிந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த ரெட்டி 1977 ஜுலை 25இல் குடியரசுத் தலைவரானார்.
இந்திரா காந்தி மீண்டும் பதவிக்கு வந்தார். 1977 குடியரசுத் தேர்தலில் தனது உள்துறை அமைச்சராக இருந்த பஞ்சாப்பைச் சேர்ந்த கியானி ஜெயில் சிங்கைக் குடியரசுத் தலைவராக வெற்றிபெற வைத்தார். இந்திரா சொன்னால் நான் தும்புத் தடியால் நிலத்தை பெருக்குவேன் என்று சொல்லிப் பதவியில் இருந்தவர் ஜெயில் சிங். இந்திரா இறந்த உடனேயே ஏடனிலிருந்து பறந்து வந்த அவர், ராஜீவ் காந்தியைப் பிரதமராக்கினார். இம்முடிவில் காங்கிரஸ் கட்சியைக் கூட அவர் கலந்தாலோசிக்கவில்லை.
1987 குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்பொழுது குடியரசுத் துணைத் தலைவராக இருந்த தமிழகத்துப் பட்டுக்கோட்டைக்காரரான ஆர். வெங்கட்ராமனை ராஜிவ் காந்தி வேட்பாளராக்கினார். அவரை எதிர்த்து முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் போட்டியிட்டார். தேர்தலில் வென்ற ஆர். வெங்கட்ராமன் 1987ஜுலை 25முதல் குடியரசுத் தலைவர் ஆனார்.
1992 ஜுலை நடந்த தேர்தலில், அப்பொழுது குடியரசுத் துணைத் தலைவராக இருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். டி. சர்மா போட்டியிட்டு வெற்றி பெற்று, 1992 ஜுலை 25 முதல் குடியரசுத் தலைவர் ஆனார். அப்பொழுது நரசிம்மராவ் பிரதமராக இருந்தார்.
1997 ஜுலை குடியரசுத் தலைவர் தேர்தலில், பிரதமர் வாஜ்பாயிடம் அப்பொழுது குடியரசுத் துணைத் தலைவராக இருந்த கேரளத்துத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கே.ஆர். நாரயணனே குடியரசுத் தலைவராக வேண்டுமெனத் தமிழகத்தின் மூப்பனாரும், முதலமைச்சர் கருணாநிதியும் விதந்துரைத்தனர். தேர்தலில் கே.ஆர் நாராயணன் பெற்றி பெற்று 1997 ஜுலை 25 முதல் குடியரசுத் தலைவர் ஆனார்.
இப்பொழுது நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முதலில் வந்த பெயர் கிருஷ்ணகாந்த். அவர் குடியரசுத் துணைத் தலைவராக உள்ளவர். அத்வானியும், பெர்ணான்டசும் கேரளத்துப் பி. சி. அலெக்சாண்டரை விரும்பினர். சிவசேனைப் பால் தாக்கரேயின் விருப்பமும் அதுவாக இருந்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் அலெக்சாண்டரை ஏற்க மறுத்தனர். இந்நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் வாஜ்பாயுடன் பேசி அப்துல் கலாமை முன் மொழிந்தார்.
அப்துல் கலாம் இராமேஸ்வரத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இராமேஸ்வரக் கோயில் சிவாச்சாரியார்களுடன் நெருங்கி பழகியவர். அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். இராமேஸ்வரத்தில் வாழ்ந்த யாழ்ப்பாணத்துச் சுவாமி கனகசுந்தரத்திடம் ஆங்கிலம் படித்தவர்.
இமயமலை தொடங்கி இந்துப் பெருங்கடல் ஈறாக வாழும் நூறு கோடிப் பல்லின மக்கள் தங்களுடைய முதல் குடி மகனாக இந்திய ஏவுகணைச் சிற்பி அப்துல் கலாமை தேர்ந்தெடுத்துள்ளனர். இநதிய மக்களாட்சி முறையில் பல குறைபாடுகள் இருந்தாலும், அப்துல் கலாமின் தேர்வு இந்தியப் பண்பாட்டின் சிறந்த பெறுபேறுகளில் ஒரு கூறாகும். இந்திய மக்களாட்சி முறைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.

0 Comments:
Post a Comment
<< Home