கொழும்புக்குப் புரியும் மொழியில் பேசுக
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
வருக, தீர்வில் உதவுக என அழைப்பதும், வந்த வழியைப் பார்த்து வெளியேறுக என விரட்டுவதும், கொழும்பு அரசுக்குக் கைவந்த கலை எனத் தில்லி அரசுக்குத் தெரியும்.
வெளியேறுக என இந்தியப் படையிடம் 1989இல் பிரேமதாசர் கூறியதும், 1998இல் பிரித்தானிய அமைச்சர் பொக்ஸைத் தந்திரமாகத் திருப்பி அனுப்பியதும் கொழும்பு அரசின் பிறவிக் குணத்தின் வெளிப்பாடு என்பதைத் தில்லி அறியும்.
இப்பொழுது நோர்வேயை வெளியேற்றிவிட்டு இந்தியாவை மீள அழைக்கும் கொழும்பின் நரித் தந்திர வலைக்குள் விழத் தயாராக இல்லை எனக் கொழும்பு அரசின் வெளியுறவு அமைச்சர் மங்கள் சமரவீராவுக்குத் தெளிவாகத் தில்லி கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் 40 தூண்கள் விலகினால் தில்லியே சாய்ந்துவிடும் என்பதே தில்லியில் உள்ளோரின் கவலை.
தமிழ்நாட்டின் நாடித் துடிப்பைத் தினமணி தலையங்கம் கூறியது போல வேறு இதழ்கள் எழுதவில்லை. இந்தத் துடிப்பைத் தில்லி உணர்வதாலன்றோ, கொழும்புக்கு இறுதியாகவும் உறுதியாகவும் தில்லி கூறியுள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருக்கையில், அவர் கூட்டிய இந்திய அனைத்துக் கட்சிகளின் மாநாட்டில், இலங்கையின் இனச்சிக்கலுக்கு அங்கு கூட்டாட்சியே மருந்து எனத் தெளிவாக முடிவு எடுத்தனர்.
மன்மோகன் சிங் பிரதமரான பின்னர், தம் வாயாலேயே கூட்டாட்சியே தீர்வு எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண்போம், நோர்வேயை வெளியேற்றிவிட்டு இந்தியாவின் துணையுடன் தீர்வு காண்போம் என்ற பகற் கனவுகளுடன் மங்கள சமரவீரா தில்லிக்கு வந்தார்.
தில்லி உடன்படவில்லை. போர்நிறுத்த உடன்பாடு தொடரவேண்டும் எனக் கூட்டறிக்கை வலியுறுத்தியமையால் கொழும்புக்கு ஏமாற்றமே. இதற்காக இவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமா? தண்டனிடவேண்டுமா?
கடந்த சில ஆண்டுகளாக, புதிய மரபைக் கொழும்பு கடைப்பிடிக்கிறது. கொழும்பில் புதிதாகப் பதவி ஏற்கும் எந்த அரசாயினும் அதன் சார்பாக ஒருவர் தில்லிக்கு வந்து தண்டனிட்டுப் போவதும், பின்னர் புதிய அதிபரோ பிரதமரோ வந்து திறை செலுத்துவதுபோலக் கைகட்டி நிற்பதும் கொழும்பு அரசின் பாங்காகி வருகிறது. பண்டாரி போன்றார் இருந்தால் இரத்தினங்களையும் அணிவோரையும் திறையாக்குவதும் மரபாகி வருகிறது.
கொள்கை வெறுமையும் இனவெறிப் போக்கும் கொழும்புத் தலைவர்களை இந்த நிலைக்குத் தள்ளி உள்ளன. சிங்கள மக்களின் தன்னாதிக்க நிலையை அடகு வைக்க அண்மைக்காலக் கொழும்புத் தலைவர்கள் முயல்கின்றார்களா?
ஆனாலும் நரித் தந்திர வழிமுறைகளைக் கொழும்பு அரசு கைவிடவில்லை. தீர்வுக்கு உதவுக எனத் தில்லியை அழைத்தனர்; படை உதவி தருக என அழைத்தனர்.
இந்த அழைப்பில் தந்திரம் இருப்பதைத் தில்லி உணராமலில்லை. உரோகண விசயவீரா தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி தலையெடுத்த 1970-80களில், இந்திய உற்பத்திப் பொருள்களை வாங்கும் சிங்கள மக்களைச் சுட்டுக் கொன்றனர். இந்தியாவை ஆக்கிரமிப்பு நாடு எனக் கொள்கைப் பிரகடனமும் செய்தனர். இந்திய முதலாளிகள் சிங்களவரைச் சுரண்டுவதாவும் அவர்களைச் சிங்கள நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் கொள்கை வகுத்தனர்.
அதே மக்கள் விடுதலை முன்னணியும் தேசியவாத புத்த பிக்குகளுமல்லவா இன்றைய கொழும்பு அரசுக்கு முட்டுக் கொடுப்பவர்கள்! எந்த இந்தியா வேண்டப்படாத நாடாக இருந்ததோ, அதே இந்தியா இப்பொழுது வரவேண்டுமாம்! யார் காதில் பூ சுற்றுகிறார்கள்?
வேதவிற்பன்னர்களும் பூசாரிகளும் பண்டாரிகளும் தீட்சிதர்களும் அங்கு குடிகொள்வதற்குத் தில்லி கோயிலல்ல.
அறிவியல் மேதைகளும் பொருளாதார மேதைகளும் தில்லியின் அரசிருக்கைகளில் அமர்ந்து இந்தியாவை வழிநடத்திச் செல்கிறார்கள். கொழும்பின் அரசியமைப்புத் தில்லியில் இருந்திருப்பின், எத்திறமையுள்ளவராயினும், இஸ்லாமியரோ, தமிழரோ, சீக்கியரோ அரசிருக்கைகளில் அமர்ந்திருக்கவே முடியாது.
தில்லியிலுள்ள மேதைகளுக்குக் கொழும்பின் தந்திரங்கள் நன்றாகத் தெரியும். எனவேதான், தில்லி தெளிவாகச் சொல்லியுள்ளது; நாங்கள் வரமாட்டோம்; நோர்வேயை அழைக்க; கூட்டாட்சித் தீர்வை முன்மொழிக; தமிழ் நாட்டுத் தமிழரே தில்லிக்குத் தூண்கள்; அவர்களின் உடன்பிறப்புகளை அழிக்க இந்தியா படையை அனுப்பாது; இதுதான் தில்லியின் நிலை.
மங்கள சமரவீரா தோல்வியுடன் திரும்பியுள்ளார்.
மகிந்தாவின் மனத்தை மாற்றக்கூடிய மொழியில், அவருக்கும் சிங்கள் மக்களுக்கும் புரியும் மொழியில், பிரபாகரனும் ஈழத்தமிழரும் பேசி வருகின்றனர். பிணப்பெட்டிகள் சிங்களக் கிராமங்களை அச்சுறுத்துகின்றன. வெள்ளைக் கொடிகளை மீண்டும் பறக்க விடவேண்டுமா? என ரணில் வினவியுள்ளார்.
கொழும்பைக் காப்பாற்றுங்கள் எனப் புத்த பிக்குகள் அலறத் தொடங்கி உள்ளனர். போர் வந்தால், சிங்களப் படை தோல்வியையே தழுவும் என இலங்கையின் விமானப் படையின் முன்னாள் தளபதி எச்சரித்துள்ளார்.
தேர்தலுக்கு முந்தைய மகிந்தாவின் பேச்சுக்கும் தேர்தலுக்குப் பின்னர் மகிந்தாவின் செயற்படவேண்டிய பாதைக்கும் தொடர்பே இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. சிங்கள இனவெறிக் குதிரையில் பயணித்தவர், வேறு வழியின்றி அந்தக் குதிரையை விட்டு இறங்க முயல்கிறார். பண்டாரநாயகாவும் இவ்வழியே முயன்று, சிங்களத் தீவிரவாதிகளின் துப்பாக்கி வேட்டுக்கு இரையானார்.
நோர்வேயை, வேண்டா வெறுப்பாக மகிந்தா அழைத்துள்ளார். பிரபாகரன் பேசும் மொழியின் தாக்கம் ஒருபுறம், இந்தியாவின் நெருக்குவாரம் மறுபுறம், தமிழர் தாயகத்தில் தனி அரசு அமைவதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி மகிந்தாவுக்கு இல்லை. தமிழீழ அரசுடன் எந்த வகையில் கூட்டு வைப்பது என்பதை இப்பொழுதிருந்து திட்டமிடுவதே அவருக்கோ, எதிர்காலத்தில் அவரது பதவிக்கு வரக்கூடிய எவருக்குமோ உள்ள முதற் பணி. நீடித்த தீர்வுக்கு இணக்கமான சூழலே அடித்தளம்.

0 Comments:
Post a Comment
<< Home